Monday, February 1, 2010

தத்ரூப வியாபாரிகள்



        ஒரு பெரிய கடைக்குள் யாருமறியாமல் திருடவென நுழைகிறீர்கள். உள்ளே இரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும், அவை இயங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கிறீர்கள். பூட்டப்பட்டிருக்கும் சாதாரண வீடொன்றுக்குள் பூட்டை உடைத்துச் சாமான்களை அள்ளிப் போவதைப்போல வெகு இயல்பாக அக் கடையிலும் பொருட்களை அள்ளியெடுப்பீர்களா? மாட்டீர்கள். காரணம் உங்களை உற்றுக் கவனிக்க ஆளிருக்கும்போது நீங்கள் எப்பொழுதும் இயல்பாக இருக்கமாட்டீர்கள். ஏதோ ஒன்று உங்களை உற்று நோக்கும்போது உங்கள் இயல்பு தொலைந்துவிடுகிறது. அவ்வாறு இயல்பு தொலைந்து, போலியாக யதார்த்த வண்ணம் பூசப்பட்ட ஆனால் இயல்பானதெனச் சொல்லிக் கொள்பவைதான் இன்றைய காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனேகமான 'ரியாலிட்டி ஷோ'க்கள்.

        அண்மையில் இவ்வாறான ரியாலிட்டி ஷோ மூலம் தனது வாழ்க்கைத் துணையைக் கண்டுகொண்டார் இந்திய நடிகை ராக்கி சாவந்த். பதினாறு இளைஞர்கள், ராக்கியை மணக்கவென முன்வந்திருந்தார்கள். அவர்களுக்குப் பல போட்டிகள், பரீட்சைகள் வைத்து, ராக்கி இறுதியில் அதிலொருவரைத் தேர்ந்தெடுத்தார். ராக்கி சொல்லும் அனைத்தையும் செய்யக் காத்திருந்த இளைஞர்களைச் சூழவும் எப்பொழுதும் கேமராக்கள் மின்னிக் கொண்டிருக்கையில் இதனை ரியாலிட்டி ஷோ எனச் சொல்வது சரியில்லை. ஆனால் அப்படித்தான் சொல்கிறது என்டிடிவி. அதுதான் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து, தொடர்ந்தும் ஒளிபரப்பி, நிறைய பணத்தையும் கண்டு, ராக்கிக்கு ஒரு துணையையும் தேடிக் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்ட தொலைக்காட்சி சேவை.

        எப்பொழுதும் கேமராவுக்காக, அலங்காரம் மின்னும் முகங்களுக்குள் இயல்பான மனித வெளிப்பாடுகள் ஒளிந்துகொள்கின்றன. அதிலும் இது போன்றதொரு நிகழ்ச்சிக்காக, சுற்றிவர கேமராக்கள் சுழல, எப்படியும் சில நாட்களில் பல்லாயிரம் மக்கள் நம்மைப் பார்ப்பார்கள் என்ற உணர்வோடு ராக்கியைக் கவர்ந்திடத் தயாராகிய இளைஞர்கள் எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் குறைகளை, பாசாங்குகளை மறைத்து, கேமராவுக்குத் தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும்படி, மிகவும் நல்லவர்களாக, திறமைசாலிகளாக வளையவந்தனர். இதில் எங்கிருக்கிறது யதார்த்தம்? இது முழுக்க முழுக்க நாடகம். கதை, வசனம் இல்லாமல் ஒவ்வொருவரும் நடிக்கவைக்கப்படுகிறார்கள். அவ்வளவே. அவர்களில் பலரும் தங்களைச் சூழ எந்தக் கேமராவும் இல்லாத அன்றாட  சாதாரண வாழ்க்கையின் போது இயல்பானதொரு வேற்றுமுகத்தைக் காட்டக் கூடும். எனவே பொதுவாகவே இவ்வாறான நிகழ்ச்சியின் மூலம் நல்ல துணையைக் கண்டடைவது என்பது சாத்தியமற்ற ஒன்று.

     
        'நாங்கள் இவ்வாறான ரியாலிட்டி ஷோக்களில் யதார்த்தத்தைக் காண்கிறோம்' என அந் நிகழ்ச்சிகளின் ரசிகர்கள் பலரும் சொல்லக் கூடும். இந் நிகழ்ச்சிகள் எல்லாமே கேமரா கவர்ந்துகொண்ட எல்லாக் காட்சிகளையுமே உலகுக்குக் காட்டிவிடுவதில்லை. இத்தனை வாரங்களுக்கென அவை செதுக்கப்படுகின்றன. அப்படிச் செதுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் அங்கங்களில் கூட சம்பந்தப்பட்டவர்களின் அழுகைகளுக்கும், உணர்ச்சி வெளிப்பாடுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தொடுவதன் மூலமே இந்த 'ஷோ'க்களின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதனை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். எனவே பார்வையாளர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டுமென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்களோ, அதற்கேற்றபடி காட்சிகளும், அதில் சம்பந்தப்பட்டவர்களும் தயாரிக்கப்படுகின்றனர். இதில் ரியாலிட்டி, யதார்த்தம், தத்ரூபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

        பொதுவாகவே எல்லா மனிதர்களும், இன்னொருவரின் அந்தரங்கத்தில் நுழைந்து பார்க்கும் ஆசை கொண்டவர்கள். அதிலும் தாம் பார்த்து, ரசிக்கும் மனிதர்களின் அந்தரங்கங்களும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் அவர்களைப் பெரிதும் கவரக்கூடியவை. பலரிடமும் அது பற்றி திரும்பத் திரும்ப பேச வைக்கக் கூடியவை. அந்த மனநிலையைப் பயன்படுத்தித்தான் இந் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இயக்குனரால் இயக்கப்பட்டு, நடிக நடிகைகள் கிளிசரின் உதவியால் அழுது வழியும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கு மத்தியில், தாங்களறிந்த பிரபலங்கள் பொது மேடைகளில் 'தத்ரூபமாக'க் கண்ணீர் சிந்துவதைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களாலேயே இந் நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன. தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் அழுகைக்காட்சிகள் எப்படி அவற்றின் வெற்றிக்கு வழி காட்டியதோ, அது போலவே நடிகர் சிம்புவின் அழுகை 'ஜோடி நம்பர் 1' பக்கமும், தேர்வு பெறாத குழந்தைகளின் அழுகை 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' பக்கமும், நடிகை சாண்ட்ராவின் அழுகை 'அணுவளவும் பயமில்லை' பக்கமும்,  'மானாட மயிலாட', 'ஓடி விளையாடு பாப்பா', இன்னும் பல 'யதார்த்த' நிகழ்ச்சிகளின் அழுகைகள் அந் நிகழ்ச்சிகளின் பக்கமும் பொது மக்களை ஈர்த்து அவற்றின் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்கின்றன.

        எனவே உருக்கமான காட்சிகளால் உருவாக்கப்படும் இந் நிகழ்ச்சிகள் பலவும் ரியாலிட்டி என்ற பெயரில் இடம்பெறும் போலி நாடகங்கள். இவற்றுக்காக பார்வையாளர்கள் தங்கள் நேரத்தைச் செலவழித்து விலைபோகிறார்கள். ஒரே ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் நடிகை ராக்கி சாவந்தினதும், பொது மக்களில் ஒரு இளைஞரினதும் முழு வாழ்க்கையையுமே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தீர்மானித்ததைப் போல பொதுமக்களையும், அவர்கள் அறிந்த பிரபலங்களையும் பலிகடாக்களாக்கி, உணர்வுபூர்வமான காட்சிகளமைத்து, பணம் ஈட்டி, இலாபம் பார்க்கும் இந்தத் தொலைக்காட்சிச்  சேவைகளனைத்துமே தத்ரூப வியாபாரிகளன்றி வேறென்ன?

- எம்.ரிஷான் ஷெரீப்,  இலங்கை


நன்றி  http://mrishans.blogspot.com/ 

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

இன்றொரு கவிதை எழுதவேண்டும்
சொல்லும்பொழுதே தாளொன்று
பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று
உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில்
எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்
கவிதைத் தலைப்புகளே இங்கு
சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை

கரும்பலகையில் வெண்கட்டி போல
தேய்ந்துபோகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்

சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன்
இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன்
கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள்
எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்

மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,  இலங்கை


நன்றி  # சொல்வனம் இதழ் 14, 11-12-2009   # நவீன விருட்சம்

வாங்க மற்றும் விற்க

வாங்க மற்றும் விற்க

நீங்கள் தேடும் பொருளுக்கான விரிவான தேடலை முயற்சிக்கலாம் அல்லது நாடு, மாநிலம், நகரம், வகை போன்றவற்றைக் குறிப்பிட்டு தேடலாம். நீங்கள் தேடுவதை சரியாக அடைய, பலவகையான தேடல்முறைகளை முயற்சிக்கவும்.

Web ID : http://www.tripleclicks.com/Yes
Type Code number: 10940726

விரைவுத் தேடல்: குறிச்சொல்லை உள்ளிட்டோ, இருப்பிடத்தைத் தேர்வு செய்தோ, அல்லது வகை/துணைவகையைத் தேர்வு செய்தோ உங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவுகளைப் பெறவும்.

மேம்பட்ட தேடல்: தேதி வரம்பை உள்ளிட்டும், பல்வேறு புலங்களில் இருந்து மதிப்புகளைத் தேர்ந்தெடுத்தும் உங்கள் தேடலை மேம்படுத்தலாம்.


வகைகளின்படி உலாவுதல்: ஒரு குறிப்பிட்ட வகையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து விளம்பரங்களிலும் உலாவவும் - உதாரணத்திற்கு, கார்களை நீங்கள் தேட விரும்பினால், பக்கத்தின் இடப்புறத்தில் உள்ள "வாகனங்கள்" வகைக்குச் சென்று, "கார்கள்" என்ற துணைவகையைக் கிளிக் செய்யவும். வெளியிடப்பட்ட தேதியின் வரிசையில், கார்களுக்கான அனைத்து விளம்பரங்களையும் முடிவில் காணலாம்.

சிறந்த தேடல் அனுபவத்தைப் பெற, மேலே குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

மகிழ்ச்சி பெறுங்கள் !!

தேங்காய் எதற்கு தெரியுமா?.


ஒருமுறை கரந்தை கவிஞரான வேங்கடாசலம் பிள்ளை ஒரு நாள் தன நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் போது,

"
திருமணத்தில் ஏன் தேங்காய் போட்டு தாம்பூலம் கொடுக்கிறார்கள் தெரியுமா ? " என்று புதிராக கேள்விக்கணையைத் தொடுத்தார்.காரணம் தெரியாது நண்பர்கள் விழிக்க,

நகைப்புடன் அதற்கான விளக்கத்தை அவர் பாணியிலேயே கூறினார்.

" தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள்" என்று விளக்கமளிக்க அங்கு கூடியிருந்த நண்பர்கள் அவரின் நயமானப் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தனர்.

நன்றி  :

பங்குச் சந்தை உஷார்



பங்கு சந்தையைப் பற்றிய செய்திகளும், பல நூல்களும் தற்போது மிகையாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.அன்று படித்தவர்கள் கூட இதைப்பற்றிய விளக்கங்களை அறிவுகளை பெறாமல் காலத்தை கடத்தினார்கள்.இன்று சாதாரனமானவர்களும் பங்கு சந்தையில் நுழைந்து சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்; என்றால் நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையை ஒரு கனம் திரும்பிப்பார்க்க வைக்கிறது.

இன்று பலரும் பங்கு சந்தையைப் பற்றி அறிவதற்கு மிகுந்த ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.தொலைசாட்சியிலும் கூட தனி நிகச்சியாக பங்கு சந்தையைப் பற்றிய விபரங்களை நிபுணர்களை வைத்து வாதிக்கிறார்கள்.

பல நிபுணர்கள் பல மாவட்டங்களில் பங்கு சந்தை விழிப்புணர்வு கூட்டங்களை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்கள். பல நகரங்களில் சப் புரோக்கர்கள் அலுவலகங்கள் அமைத்து இணையதளம் மூலம் தினசரி வர்த்தகங்களையும் செய்யுமளவு பங்கு சந்தையின் வளர்ச்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலோர் ஏஜண்ட்டுகளை நம்பியே தங்களின் முதலீடுகளை செய்து வருகிறார்கள்.பலருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் அதிகம் இருக்கிறது அதே நேரத்தில் நாம் செய்யக் கூடிய முதலீடுகள் நல்ல கம்பெனியில் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தன்னால் உறுதியாக சொல்லமுடியாமல் ஏஜண்டுகளின் வாய்மொழிகளை நம்பியே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

பலரை நான் கைக்காட்டுவதை விட என்னையே இங்கு உதரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு மித்த ஆர்வம் என்னிடம் இருக்கிறது.
2007-ல் ஒரு ஏஜண்ட் என்னை அனுகினார்.இன்சுரன்ஸ்சுடன் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பணத்திற்கு முழுபாதுகாப்பு என்று கூறி யூலிப் என்ற ஸ்கீமை கூறினார்.

மூன்று வருடம் மட்டும் நீங்கள் தொகை செலுத்தினால் போதும் நான்காவது வருடம் உங்களுக்கு இரண்டுமடங்காக உங்கள் தொகை உங்களுக்கு கிடைக்கும் என்றார்.நானும் ஆர்வத்துடன் யூலிப் ஸ்கீமில்(ULIP) சேர்ந்தேன்.

பங்கு சந்தையைப் பற்றிய நூல்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன் அதன் பின் தொலைக்காட்சிகளில் பங்கு சந்தைப்பற்றிய செய்திகளை கேட்க ஆரம்பித்தேன்.

முதலீடு செய்த யூலிப்பைப் பற்றிய விபரங்களை அறிய ஆரம்பித்தேன் சந்தையில் மூன்றாண்டில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று மனிக்கண்ரோல் என்ற இணையதள முகவரியல் ஆய்தேன்.

அதிர்ச்சியாக இருந்தது.மூன்றாண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 3 லட்சம் கட்டிருந்தேன். இந்த 3 ஆண்டில் அதன் வளர்ச்சி என்பது ஒன்றுமே இல்லை.
நான் கட்டிய தொகையிலிருந்து 30 சதவிகிதம் குறைவாகவே இருந்தது.
பங்கு சந்தையில் பலரும் பணம் பார்ப்பதாக கூறுகிறார்கள் ஆனால் நமக்கு ஏன் இப்படி குறைவாக இருக்கிறது என்று அலசினால் பல செய்திகள் வெளிவருகிறது.

யூலிப் என்ற இன்சூரன்சுடன் கட்டக்கூடிய ஸ்கீம் பத்து ஆண்டுகளுக்கு தொடந்து கட்டினால் இந்த 10 ஆண்டில் நம் பங்கு வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும். 4 வதுஆண்டில் இரு மடங்கு கூடும் என்பது ஏஜண்ட் கூறும் மாயை வார்த்தைகள். காரணம் யூலிப் ஸ்கீமில் கட்டக்கூடிய முதல் பிரிமியத்தில் ஏஜண்ட் கமிஷன் சுமார் 40 சதவிகிதம் கழித்து மீதி உள்ள 60 சதம் மட்டுமே முதலீட்டு செய்யப்படுகிறது.அதுமட்டுமல்ல அதில் நாம் எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கழிவு போகும்.இந்த விபரங்களை எல்லாம் ஏஜண்ட் நம்மிடம் கூறமாட்டார்.அதில் கட்டக்கூடிய இன்சூரன்சில் நம் முதலீட்டிற்கு பாதுகாப்பு அல்ல.கட்டக்கூடியவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் நாமினியாளர்கள் கட்டியத் தொகையை வசூலிக்க முடியும் அவ்வளவுதான்.

ஆனால் பல அப்பாவிகள் (என்னைப்போன்றவர்கள்) இதில் மாட்டிக் கொண்டு பங்கு சந்தையைப் பற்றி தவறான ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதனால் நாம் முதலீடு செய்யப்போகும் ஸ்கீமைப்பற்றி நிபுணர்களிடம் கேட்டு தெளிந்து பணத்தை போடுவது சிறந்தது.

பங்கு சந்தை முதலீடு என்பது ஒரே ஒரு ஸ்கீமில் மட்டுமல்ல.அது கடலைப் போன்றது.அதை முழுமையாக அறிவதென்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தினமும் அதை பார்வையிட்டு வந்தால் அதைப்பற்றிய விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

யூலிப் ஸ்கீமில் முதலீடு செய்வதைவிட மீச்சுவல் பண்ட்(MUTUAL FUNDS) மிகச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.(இதிலும் சிறு முதலீட்டை செய்து பலன் சொன்னமாதிரியே கிடைத்தது.)அதில் அதிகமான கமிஷன் யாருக்கும் செல்லுவதில்லை.நம்முடைய தொகை முழுவதும் முதலீடாகும்.

இன்னும் வங்கியில் டிமேட்(DEMAT) கணக்கை திறந்துக் கொண்டு நாம் நேரடியாகவே STOCK பங்குகளை வாங்கி நம் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.இதனால் லாபமும் அதிகம் காணலாம், கண்கானித்து வந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.இதெல்லாம் செய்வதற்கு முன் பங்குசந்தையைப்பற்றிய அடிப்படையான விசயங்களை தெரிந்துக் கொண்டு இறங்குவது முதலீடு செய்வது சாலச்சிறந்தது.

பங்கு சந்தையில் பணம் பார்த்தவர்களும் உண்டு பணத்தை பறிகொடுத்தவர்களும்உண்டு அதனால் மிக கவனமாக நிதானமாக முதலீடு செய்ய வேண்டும்.



எதுவும் நடக்கலாம்


அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்

காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்

அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்

பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்

அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்

அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி

அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி

அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்

சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்

எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி

எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை

இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நன்றி : http://niroodai.blogspot.com

ஆச்சர்யம்

பார்க்கவே அதிசயமாக இருந்தது மனிதர்கள் எதிலெதில் எப்படியெப்படியெல்லாம் வாழ்க்கிறார்கள்.
என்னிலையிலும் காக்கக்கூடியவன் இறைவன் என்பதால் கல்லான குகைகளுக்குள்ளும் மலைகளுக்குள்ளும் வீடுகளை அமைத்து வாழ்க்கிறார்கள்.

நம்மைவிட மேன்மையானவர்களை கண்டு அதேபோல்வாழ்வேண்டும் என்றெண்ணி உள்ளதையும் பறிகொடுத்துவிடாமல்


நமக்கு கிடைத்த வாழ்க்கையெண்ணி நாள்பொழுதில் நொடிக்கொடி இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.


இது எனக்கு மெயிலில் வந்தது 
                                             
                                                      அன்புடன் மலிக்கா
 
நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails