நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்
இஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்).
இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.
பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?
இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது கட்டுரைக்கு வலு சேர்ப்பதாய் அமையுமென நம்புகின்றேன்.
டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.

.jpg)






