Monday, December 29, 2014

இஸ்லாமிய திருமணம் ஒப்பந்தம் எளிமையானது

மணமகன் மணமகள் -ஒப்புதல்
இரண்டு சாட்சிகள் - அவசியம்
அவ்வளவுதான் திருமணம் முடிந்தது
இதுதான் இஸ்லாமிய திருமணம்
மொழி எந்த மொழியாகவும் இருக்கலாம்
மொழி- மணமகன் மணமகள் ,சாட்சிகள் அறிந்தவையாக இருந்தால்தானே ஒப்புதலும் சாட்சிகளும் கொடுக்க முடியும்.
ஊர் முறைபடி  தற்காலங்களில் மணமகன் மணமகள் ஒப்புதலுக்கு அடையாளமாக அவர்களது கையெழுத்தும் சாட்சிகள் கையெழுத்துகளும் வாங்கிக் கொள்கின்றார்கள்
இது ஒப்பந்த பத்திரமாக பாதுகாக்கப் படும்
நபி (ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்தியது (துவா)
நபி வழியில் திருமண வாழ்த்து.

 ”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
      பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).  நூல் : அஹ்மத், அபூதாவுத்.

மணமக்களை வாழ்துவது
நபிமார்கள் வாழ்ந்தபடி வாழுங்கள் என்று அரபியில் யாரோ எழுதிவைத்ததை மனனம் செய்து வாழ்த்துவதும் வழக்கமாக இருந்து வருகின்றது .ஆனால் அதனை இப்பொழுது தமிழில் அதனை மொழிபெயர்த்தும் மார்க்க அறிஞர்கள் சொல்லத் தொடக்கி விட்டது பாராட்டுக்குரியது.
மற்றும் பலர் இனிய தமிழில் வாழ்த்துவதும் நடைமுறையில் உள்ளது

எது நபிவழி ..?


போராட்டங்கள் ,தியாகங்கள்,இழப்புகள்,உங்கள் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காத பிற இயக்கங்களால் கைவிடப்படல் இப்படியாக பல தடைகளையும் தாண்டி இன்று ஓங்கிய ஆலமரங்காய் பல இஸ்லாமிய
இயக்கங்கள் நம் சமுதாயத்திற்கு நிழல் தந்து கொண்டிருப்பதாக
நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நடுநிலைப் போக்கை எம்போன்றோர்களுக்கு சில விளக்கங்களைத் தர இவ்வொட்டு மொத்த இயக்கங்களும் கடமைப்பட்டுள்ளன

நடுநிலை என்றவுடன் இங்கொரு கால் அங்கொரு கால் வைத்திருப்பவர்கள்
என்று கருதவேண்டாம் நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்கள் . இறைவாக்கினையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸுகளையும் ஆதாரமாகக்கொண்டு
எல்லாவற்றுக்கும் விளக்கம் தரும் நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக களமிறங்கும்போது மட்டும் அதே இறைவேதமும் ஹதீஸுகளும் உங்களுக்கு மட்டும் விதிவிலக்காகிப் போனதா என்று நினைக்கும் அளவிற்கு உங்களின் உயர்ந்த கொள்கையினை விட்டு சற்று சருகுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

Sunday, December 28, 2014

இஸ்லாத்தை தழுவ விரும்பிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

(நடுவில் அமர்ந்திருப்பது சர் வின்ஸ்டன் சர்ச்சில், இடது பக்கம் அமர்ந்திருப்பவர் மகன் ரோன்டால்ஃப், வலது பக்கம் அமர்ந்துள்ளவர் சகொதரர் ஜான் சர்ச்சில், மேலே அமர்ந்திருப்பது மருமகன்)

பிரிட்டனை ஆண்ட பிரதமர்களில் வின்ஸ்டன் சர்ச்சில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர். இவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. 1940 லிருந்து 1945 வரையும் பிறகு 1951 முதல் 1955 வரையும் பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்தவர்.

காயிதே மில்லத்தின் அரசியலும், இன்றைய முஸ்லிம் அரசியலும்!

காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'இனி முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.

பெரியாரின் வலி மிகுந்த அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை, இன்றைய முஸ்லிம்களின் அவல நிலையிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

Friday, December 26, 2014

நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக டிசம்பர் 25 முதல் 28 வரை சென்னை புரசைவாக்கத்தில் வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி எனும் மையக்கருத்தில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமது அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர் மதன் திறந்து வைத்து உரையாற்றினார்.

அமைதியை நோக்கி எனும் வாழ்வியல் கண்காட்சியை முழுமையாக பார்வையிட்டேன். காட்சி அமைப்புகளும், சிறுவர்களின் விளக்கமும் எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனென்றால் இன்றைய சமுதாயம் வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். அவர்கள் நிறைய படிக்க வேண்டும்.

Thursday, December 25, 2014

ஒரு சொல்.- நிஷா மன்சூர்


ஒருசொல் உருவாக்கும் விளைவுகள் பாரதூரமனவை
உதாரணமாக மதுபோதையிலிருக்கும் ஒருவன் நம்மீது மோதிவிடுகிறான்,மோதியது மட்டுமல்லாமல்
"ஏய்,பாத்து வாய்யா....ங்கொ....."
என்று கடுமையாக வைதுவிடுகிறான்.
நம் மனோநிலை எப்படி இருக்கும்...??
ராங்கா வந்ததுமில்லாம எம்மேல மோதிட்டு என்னையே பாத்துவான்னு சொல்றியா...அதுவும் தாய் தொடர்பான அசிங்கமான வசவு வார்த்தையோட.
நம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை ரெளத்ரம் தாண்டவமாடுகிறது,நம் சிந்தனை உணர்வு எல்லாம் கோபத்தின்
அதீத உச்சத்தினால் தடுமாறிவிடுகிறது,
அவனை அடிக்கப் பாய்கிறோம்,
அவனை கடுமையாக தண்டிக்கத் துடிக்கிறோம்,
நம் அறிவுகூட திகைத்து நிற்க..உணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க
மிகுந்த வெறியோடு அவனை அணுகுகிறோம்.

Tuesday, December 23, 2014

ஏகனே இறையோனே....! - ராஜா வாவுபிள்ளை

ஏகனே இறையோனே....!

தன்னிகரில்லா தனித்தோனின் காவலில் இருந்தே
அவனருள் வேண்டியே நிதமும் - தவறாது
போற்றி ஐவேளையும் வணங்கியே வாழ்ந்திட
பணித்தோனே ஏகனே இறையோனே!!

உண்மையாய் உணர்ந்து உள்ளத்தில் நிறுத்தி
அளவற்ற அருளாளனின் அனுக்கிரகம் பெற்றிடவே
அனுதினமும் அக்கறையாய் அனுஷ்டிக்கும் பழக்கத்தை - தவறாது
தந்திடுவாய் ஏகனே இறையோனே!!

பேறும் பிறப்பும் இறப்பும் இல்லாத
அகிலத்தை ஆளுகின்ற நிகரற்ற அன்புடையோன்
உன்னிடத்தே உளமார வேண்டுகின்றேன் - தவறாது
தருவாயே ஏகனே இறையோனே!!

LinkWithin

Related Posts with Thumbnails