Monday, January 12, 2015

:"மது" தனிமனித & சமுதாய கேடு

இரண்டு வருடங்களுக்குமுன் எமது தாயார் பஞ்சாயத்து தேர்தலில் நின்றபொழுது என் நண்பர் என்னை அழைத்து "பசங்களுக்கு சரக்கு வாங்கி தந்தால் நிச்சயம் ஜெய்த்துவிடலாம்" என்றார். அதற்க்கு அவர் தோற்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று கூறிவிட்டேன். தனிமனித இழப்புகள் சமுதாய இழப்புகளைவிட பெரிதல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

இஸ்லாமிய மார்கத்தை ஏற்க்கும் முன் எனக்கும் குடிப்பழக்கம் இருக்கத்தான் செய்தது அதற்க்கு காரணம் அது அவமான சின்னமாக என் சமுதாயத்தில் இருந்ததில்லை. ஊரும் சமுதாயமும் குடும்பங்களும் அதனை ஏற்று பழகிஇருந்தது, எனவே குடியில் பெரும் நாட்டம் இல்லாத எனக்கும் அந்த பழக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இஸ்லாமிய சமுதாயம் என்னை மாற்றியது! எந்தவொரு மத விழாக்களின்பொழுதும் டாஸ்மாக் நிரம்பி வழிவதையும் பார்க்க முடியும்! ஆனால் இஸ்லாமிய பண்டிகையை கவனித்தவர்களுக்கு தெரியும் குடி பழக்கமு உள்ள ஒருசிலரும் அன்று குடிப்பதை விடுத்து தொழுகைக்கு சென்று விடுவார். ஆனால் மற்ற சமுதாயத்தில் குடிபழக்கம் இல்லாத சிலரும் விழா நாட்கள் அன்று போதைக்கு விலையாகிவிடுவார்.ஒரு முறை குடித்தால் அந்த இஸ்லாமியர் அந்த மது ரத்தத்தில் இருக்கும் வரை அவர் தொழ முடியாது மேலும் 40 நாட்களின் தொழுகை பாழாகி போகும் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியர்க்கும் தெரியும். எனவே இறையச்சம் அதிகம் கொண்ட சமுதாயத்தில் குடி பழக்கம் வெகு குறைவு, குடிப்பவர் கூட அதை வெளிப்படுத்த வெட்கப்படுவார்.

இருட்டு ... அதுதான் நிஜத்தின் வெளிச்சம் !

இருட்டு ...
அதுதான்
நிஜத்தின் வெளிச்சம் !

இருட்டு...
உலகத்தின்
மாய வண்ணனங்களும்
ஞான எண்ணங்களும்
ஒளிந்து கிடக்கின்ற
அதிசயக் கிணறு !

இருட்டுதான்
வெளிச்சத்தின்
தாய்வீடு !

ஹிராவின்
கர்ப்ப இருட்டில்தான்
இறைவனின் வேதம்
வெளிச்சமாய் பிறந்தது !

இருட்டு இல்லையென்றால்
ஜிப்ரீலின் உருவம்
வெளிச்சப்பட்டிருக்காது !

தவ்ரின் இருட்டு
போர்வைதான்
பெருமான் நபிகளை
போர்த்தி வைத்தது !

அய்யாமுல் ஜாஹிலிய்யா
அகிலத்தை
ஆக்கிரமிப்பு செய்ததால்தான்
நூரே முஹம்மதியா
இறங்கி வந்தது !

இருட்டிலிருந்துதான்
உலகம் தோன்றியது
இருட்டுக்குப் பிறகுதான்
இறுதி நாளும் வருகிறது !

இருட்டு
இறந்து போகும்
ஒரு நாளில்தான்
சொர்க்கமும்
ஜனிக்கப் போகிறது !
 

@ படம் ...
நேற்று நான் எடுத்தது.
இந்த படம் தந்த சிந்தனை
இந்த இருட்டை பற்றிய கவிதை !
 

Friday, January 9, 2015

கடமையென்ற கரு ஒன்று; கற்றுத்தரும் பாடமுண்டு;/ யாசர் அரபாத்

 
 
கடமையென்ற கரு ஒன்று;
கற்றுத்தரும் பாடமுண்டு;
ஐவேளைப் பிரித்துக் கொண்டு;
அழகாய் நீயும் தொழுவது நன்று!

நெருக்கத்தோடுத்
தோளைக்கொண்டு;
நொறுக்கித் தள்ளு;
தீண்டாமை இன்று!

பயிற்சிப் பெற்ற
இராணுவமும்
மிரட்சிக் கொள்ளும்;
நம் ஒழுங்கைக் கண்டு!

தக்பீர் சொன்ன
குரலைக்கேட்டு;
சப்தம் குலையும் நம்
அமைதிக்கண்டு!

தொழுகை என்ற
கவசம் கொண்டு;
தீமையைக் கொல்வாய்
உடனே இன்று!

Monday, January 5, 2015

நெற்றிக் காய்ப்பு - கவிமாமணி பேராசிரியர் தி.மு. அப்துல் காதர்

தலைவணங்காச்
சாத்தானிய நெருப்பணைக்க
ஆண்டவன் எறிந்த
ஆதி ஆத மண் உருண்டை

மூல ஒளி தேடும்
மாதிரிகளின் சுடர்
மகுட மாணிக்கம்

மறுமையில் நிகழும்
மனிதத் தேர்தலில்
என்றும் ஆள்பவனுக்குக் காட்டும்
அடையாள அட்டை
ஐம்புலத்
தலைநிலத்தில்
மண்விதைத்த
மகரந்த விதை
ஆம்
வீடுபேற்றுக் கனி
விதை

Wednesday, December 31, 2014

பெருமானாரின் பேரன்புக்கு உரிய மகளாக இருந்தாலும் வாழ்க்கை என்னவோ வறுமையில்தான் !

எங்கள் கண்மணி நாயகம் நபிகள் ( ஸல் ) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் !
பெருமானாரின் பேரன்புக்கு உரிய மகளாக இருந்தாலும் வாழ்க்கை என்னவோ வறுமையில்தான் !
அன்புக்கணவர் அலீ ( ரலி ) , பிள்ளைகள் ஹசன் ஹுசைனோடு இனிய வாழ்வு வாழ்ந்த பிராட்டிக்கு வீட்டு வேலைகள் செய்ய இயலவில்லை.
காரணம்...
உடலில் வலுவில்லை !

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்....!


உடலுழைப்பு தினமும் வேண்டும்
உழைத்துண்டு வாழ வேண்டும்
பகிர்ந்துண்டு இன்பம்காண வேண்டும்
உறுதியான உடலுரம் வேண்டும்

உண்மையான அன்பு வேண்டும்
தற்பெருமையில்லா எண்ணம் வேண்டும்
சோர்வில்லா செயலாற்றல் வேண்டும்
உரிமையான உறவுகள் வேண்டும்

கூடிவாழும் சமூகம் வேண்டும்
தன்னலமற்ற தலைமை வேண்டும்
உரிமைக்கு குரல்கொடுக்க வேண்டும்
மாற்றங்கள் மலர வேண்டும்

உறுதியான இறைநம்பிக்கை வேண்டும்
இயற்கையான உலகம் வேண்டும்
செயற்கையை மறுக்க வேண்டும்
எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும்
ராஜா வாவுபிள்ளை

குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல அது அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!



ஒரு முஸ்லிம்,

நோன்பிருப்பதன் அருமையை அறிவியல்ரீதியாக
அறிந்ததால் நோன்பிருப்பதில்லை,

தொழுகையால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய பலன்களுக்காக தொழுவதுமில்லை,

இன்னும் ஹஜ்ஜை,
அறுக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே உண்பதை,
ஒழு செய்வதை,
அமர்ந்து நீர் அருந்துவதை,
தாடி வைத்துக் கொள்வதை,
மதுவின் பக்கம் நெருங்காமலிருப்பதை,

இன்னும் இன்னும்
எல்லா நற்செயல்களையும்
அவன் செய்வது,
இறைவனுக்கு அடிபணிவதற்காகவும்
இறைத்தூதர் சொல்
அடிபிறழாமல் நடப்பதற்காகவும்தான்

அவற்றை அறிவியல் நிரூபிப்பது கண்டு
மகிழ்கிறானே அன்றி
அறிவியல் அவனுக்கு ஒரு பொருட்டல்ல

மேலும் குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல
அது அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!

-நிஷா மன்சூர்
*******************************************************

LinkWithin

Related Posts with Thumbnails