Thursday, January 26, 2017

இது தான் வாழ்க்கையா..

Saif Saif
சில நேரங்களில் நாம் ஒழுங்காக தானே இருக்கிறோம் ..
அல்லாஹ் நம்மை ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ ..
அநியாயம் பண்றவனெல்லாம் நல்லா தானே இருக்கான் ..
என்று நினைக்க தோன்றும் ..
ஆனால் அது உண்மையல்ல.
வெளி தோற்றத்தில் அவ்வாறு இருக்குமேயன்றி உண்மை அதுவல்ல ..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருந்து கொண்டு தானிருக்கும் .
இன்னும் நல்லவர்களுக்கான பெரும்பாலான தண்டனைகள் உடனுக்குடன் அவனுக்கு கொடுக்கப்பட்டு அவன் வழி தவறா வண்ணம் இறைவன் பார்த்துக்
கொள்கிறான் .
அவன் விரும்பாத மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு கடைசியில் கையை விரித்து விடுகிறான் ..

Tuesday, January 24, 2017

தோழரே...........................!

தோழரே...........................!
=====================Yembal Thajammul Mohammad
தொல்காப்பியர் காலத்தில் தலைவன் / தலைவிக்குத் தொடர்பிலிருந்த பன்னிரண்டு வகை நட்பினரில் “தோழர்,தோழி” முதலிடம் பெற்றவர் ஆவர்.
“தோழன்,தோழி” எனும் சொற்கள் சங்ககாலத்தில் பெருமளவில் வழக்கத்தில் இருந்தவை.
மதீனாவைத் தலைநகராகக் கொண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆட்சி செய்த காலத்திலும் அவர்களைப் பின்பற்றியோர் அவர்களுடைய “தோழர்கள், தோழியர்” என்றே அறியப்பட்டனர்.

Wednesday, January 18, 2017

தாடி வளர்ப்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்.

தாடி வளர்ப்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம்.

இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

Thursday, January 12, 2017

ஜும்மா முபாரக்...


ஜும்மா முபாரக்...
Sirajudeen Bin Mustafa Kamal
வெள்ளிக்கிழமை ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஜும்மா முபாரக் என்று சொல்வார்கள்... அப்படி என்றால் என்ன? அது எப்பொழுது உருவானது என்று என் ஊரைச் சேர்ந்த, எனது நண்பர் ஷேக் அஹமது எஸ்எஆர் கேட்டிருந்தார்... அவருக்கான விளக்கப்பதிவு. உங்களுக்கும் உதவக்கூடும் நண்பர்களே..
1989 ம் வருடம்...
மார்கழிப் பனிபொழியும் டிசம்பர் மாதம்...
ஒரு வெள்ளிக்கிழமை...

Thursday, January 5, 2017

உதவி செய்ய தூண்டும் பிரதமர்...

'
'உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்'' என்னும் இறைமறை வசனங்களை நினைவூட்டும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளில்
2017 ம் வருடம் முழுவதும் Year of Giving என்று பெயரிட்டு பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக யுஏஇ துணை அதிபர் மற்றும் துபாய் பிரதமரான ஷேக் முகமது பின் ராசித் அல் மக்தூம தெரிவித்தார்...

Wednesday, January 4, 2017

இறைவா!

இறைவா!
இயலாமையிலிருந்தும்
சோம்பலிலிருந்தும்
கோழைத்தனத்திலிருந்தும்
கருமித்தனத்திலிருந்தும்
தள்ளாமையிலிருந்தும்
மண்ணறையின் வேதனையிலிருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா!
உள்ளத்தில் உன்னைப்பற்றிய அச்சத்தைஏற்படுத்தி,
அதைத் தூய்மைப்படுத்துவாயாக!
அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன்.
நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.

ஜும்ஆ உரை

ஜும்ஆ உரை
- வர்தா புயல் போன்று ஒரு முகமது நபி(ஸல்) அவர்கள் கால சம்பவம் : ஒரு ஜும்மா உரையில் நபி(ஸல்) அவர்களிடம் தோழர் ஒருவர் மழைக்காக பிராத்திக்க கேட்டு நபி அவர்கள் பிராத்தனை செய்கிறார்கள், அடுத்த வாரம் ஜும்மா அன்று அதே நபி தோழர் மழையை நிறுத்த பிரதிக்குமாறு கேட்கிறார்கள். அப்பொழுது அவர் மக்களுக்கு ஏகத்துவம் பற்றியும் பாவம் பற்றியும் எச்சரிக்கை செய்யும் குர்ஆன் வசனங்களை கூறி பின் அல்லாஹ்விடம் பாவ மண்ணிப்பு தேடி பிறகு மழை நிற்க பிராத்தனை செய்கிறார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails