சென்ற செப்டம்பர் 11 அன்று நடந்த மெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்கு வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகையை வழங்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் சொந்தங்களை இழந்தவர்களுக்கு இந்த பொருளுதவியானது மிக உதவிகரமாக இருக்கும்.
பின் லாடன் குரூப்பின் பாக்கர் பின் லாடன் முதல் முக்கிய அதிகாரிகள் வரை எவரும் நஷ்ட ஈட்டுத் தொகையை அளிக்காமல் சவுதியை விட்டு வெளியேற முடியாது என்ற கண்டிஷனும் போடப்பட்டுள்ளது.
Wednesday, September 16, 2015
Tuesday, September 15, 2015
ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை - ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்
ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்
( முதுவைக் கவிஞர் மர்ஹும் ஹாஜி உமர் ஜஹ்பர் )
அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் !
சவூதி அரேபிய நாட்டின் ஹிஜாஸ் மாநிலத்தில் புனித மக்கா நகரில் தான் கஃபா புனித ஆலயம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கஃபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையெத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன !
நிலை கொண்ட மாண்பாளர்களும் தனக்கே அந்தப் பணியைச் செய்யும் தகுதியும் உரிமையும் உண்டு என
நபி பெருமானுக்கு நபிப்பட்டம் வழங்கப்படுவதற்கு முன்னொரு நாள் ஒரு சம்பவம் ! ஒரு பேரிடரினால் கஃபா ஆலயத்தை மறு சீரமைப்புச் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது. கஃபா ஆலயத்தின் வடகோடி மூலையில் பதிக்கப்பட்டிருந்த “ஹஜ்ருல் அஸ்வத்” என்னும் மாணிக்கக் கல்லை மீண்டும் ஏற்றி வைக்கும் பணி ஏற்பட்டது.
Monday, September 14, 2015
குர்பானி - இதன் பின்னணி, நோக்கம், யார்மீது கடமை , சட்டங்கள் , சந்தேகங்கள் , தெளிவுகள் ?....
குர்பானியின் பின்னணி
=====================
நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள்.
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நட மாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்று முள்ளவனாகவே காண்பீர்கள்.”
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
குர்பானிய சட்ட திட்டங்கள்
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும்.
குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபிய வர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.
குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்க ளுக்கு தொகுத்து வழங்குகிறேன்.
குர்பானியின் பின்னணி
நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்ப வத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள்.
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
Saturday, September 12, 2015
தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்
இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப்படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை மிகவும் அலாதியானது. அவர் முழுக்க முழுக்க இறைவனுக்குக் கட்டுப் பட்டவராகவும் இறைக்கட்டளைகள் எதுவானாலும் சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றுபவராகவும் இருந்தார். இறைவன் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையும் ஈடிணையில்லாதது. சிலைவணங்கிகளாயிருந்த தன் நாட்டு மக்களுக்கிடையே தனிநபராக நின்று சத்தியப்பிரச்சாரம் செய்து அதன் விளைவாக அந்நாட்டு அரசனால் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டார். இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக தனது ஆருயிர் மனைவியையும் பச்சிளம் பாலகனையும் ஒரு பாலைவனத்தின் நடுவெளியில் விட்டுவிட்டு வந்தார். இவ்வாறு தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் பரீட்சைகளையும் ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றி வந்தார். இறைவன் அனைத்து சோதனைகளிலும் அவரையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றவும் செய்தான். அவருக்கு உச்சகட்டமாக வைக்கப் பட்ட ஒரு பரீட்சையை மனிதகுலம் நினைவுகூரவும் அதன் படிப்பினையை வாழ்வில் கடைப் பிடிக்கவுமே முஸ்லிம்களால் பக்ரீத் அல்லது தியாகத் திருநாள் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Thursday, September 10, 2015
ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரின் முப்பெரும் விழா..!!
ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரின் முப்பெரும் விழா..!!
இறைவைனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக “ஓர் ஆண் கல்வி கற்பதால் தனி ஒருவருக்கு மட்டுமே பயன், ஆனால் பெண் கல்வி கற்கும்போது அது சமூகத்திற்கே பயன்படும்” என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகத்தில் சிறந்த ஆலிமாக்களை உருவாக்கும் வகையில் "ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி"யினை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்தக் கல்லூரி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்து நான்காம் ஆண்டில் காலடி பதித்துள்ளது.
இந்தக் கல்லூரியில் மாணவிகள் தங்களது மூன்று வருட ஆலிமா பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 6, 2015 (ஞாயிறு) அன்று இந்த மூன்று வருட பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள 20 மாணவிகளுக்கு "ஹாதியா" என்ற பட்டம் வழங்கும் நிகழ்வு சமூகத்தின் தலைசிறந்த உலமாக்கள், அறிஞர்கள், இயக்கத் தலைவர்கள், மற்றும் சமூகப் பிரமுகர்கள் முன்நிலையில் நடைபெற்றது.

பெண்களும், கல்வியும்
பெண்களும், கல்வியும்
-by நாகூர் ரூமி
அறிவைத் தேடுகின்ற தகுதி ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று திருமறையின் எந்த வசனமும் சொல்லவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 750 வசனங்களில் இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்திக்கும்படித் திருமறை ஆண்களையும், பெண்களையும் கேட்கிறது. பெருமானார் மிகவும் தெளிவாகக் கூறிய ஹதீதுகளையும் கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்வதாக உள்ளன. சில உதாரணங்கள்.
“நபியே எந்தக் காரியம் சிறந்தது?” என்று ஒரு முறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவே சிறந்தது” என்று பதில் சொன்னார்கள்.
“நபியே திருமறையை ஓதுவதைவிட கல்வி கற்றுக் கொள்வது சிறந்ததா?” என்று ஒருமுறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவின் மூலமாக அன்றி, வேறு எப்படித் திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

Subscribe to:
Posts (Atom)