Wednesday, May 26, 2010

நினைவுகள்


நினைவுகள்
வீணை மீட்டும் விரல்கள் போல்
நெஞ்சை மீட்டிப் போகின்றன
உன் நினைவுகள்!

வளர்பிறை போல் அந்
நினைவுகள் எல்லாம்
வளர்ந்து கொண்டேயிருக்க
நான் மட்டும் தான்
தேய்ந்து கொண்டேயிருக்கறேன்
தேய்பிறை போல!

காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல்
திசை மாறும் விசைப் படகினைப் போல்
உன் நினைவுகள் என்னை
திசை மாறச் செய்கின்றன!

கடல் அலைகள்
துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்து வந்தாலும்
கரையை அணைத்துக கொள்வதில்லை!
வருடி விட்டுத் தான் செல்கின்றன.
அது போலத் தான்
உன் நினைவுகளும்!

ஆனாலும் அந்த ஆர்ப்பரிப்பில்
கரையே அடித்து செல்லப்படும்
அபாயம் கூட நேரிடலாம்!
அது போலத் தான்
உன் நினைவுகள்
சில நேரங்களில் என்னை
சிதையுண்டு போகச் செய்கின்றன!

சட்டென வந்து போக
வானவில் அல்ல
உன் நினைவுகள்!
அவை வானத்து
நிலவு போல்…

சில நேரங்களில்
தேய்வது போல் தோன்றினாலும்
பல நேரங்களில்
வளர்ந்து கொண்டே
தான் போகிறது!

நிலவில் வசிக்க
முடியுமா என யோசித்துக் கொண்டிருக்கும்
மனிதர்கள் மத்தியில்
உன் நினைவுகளில்
வசிப்பதே சுகமாகிப் போனது
எனக்கு!

உலகின்
ஏதோ ஓர் மூலையில்
நீ உன் கணவனோடு!
நான் இங்கே
இன்னமும்
உன் கனவுகளோடு…
Words cant 
just explain how much I miss you...
- "Jumaana" Syed Ali நினைவுகள்http://www.jsyedali.com/profile/poems_feelings.php



1 comment:

  1. romba nalla irrukku.

    நிலவில் வசிக்க
    முடியுமா என யோசித்துக் கொண்டிருக்கும்
    மனிதர்கள் மத்தியில்
    உன் நினைவுகளில்
    வசிப்பதே சுகமாகிப் போனது
    எனக்கு!

    ReplyDelete