Friday, October 1, 2010

புதிதாய் பூவுலகில் உதித்துள்ள என் பெயரனே..! by கலாம் காதிர்

தங்கமகள் கருவறையில்
தங்கவைத்து பாதுகாத்து
பங்கமின்றி படைத்து
இங்கே அனுப்பிய
அல்லாஹ் ஒருவனுக்கே
எல்லா புகழும்..............!

பட்டு கன்னம்
தொட்டு உரசி
நேச மேகங்களால்
பாச மழைப் பொழிகின்றாய்

பிஞ்சு கைகளால் பற்றி
பஞ்சு கால்களால் என்
நெஞ்சின் மீது நடந்து
கொஞ்சும் மழலை பேசுகின்றாய்

படம்பிடித்தால் புன்னகைக்கின்றாய்
அடம்பிடித்து சிலநேரம் அழுகின்றாய்
விடுமுறை கழிகின்றது உன்னோடு
அடுத்தமுறை வரும்வரை விளையாடு


No comments:

Post a Comment