Tuesday, June 21, 2011

முஸ்லிம் பெயர் தாங்கிகள்.

முற்போக்குவாதிகள் என்ற கோலத்துடன் அல்லது போலி வேடம் போட்டு மக்களை கவருதாக நினைத்து தான் சார்ந்த மார்க்கத்தினை  மறந்து வாழும் மனிதர்களை நாம் பார்க்கின்றோம். புகழ் நாடி,தேர்தலில் வெற்றியடைய  அல்லது காரியம் கைக்கூட வேண்டும் என்ற காரியத்திற்காக எதையும் செய்வார்கள்  இவர்கள்.


   புதிய செய்தி  கிரிக்கெட் விளையாட்டு வீரர்   சாகிர்  கான் கோவிலுக்கு சென்று வேண்டினாராம் . திரைப்பட நடிகை இவருக்கு காதலி. இவர் எப்படி வேண்டுமானாலும் வாழ அவருக்கு உரிமை இருப்பினும் தான் ஒரு இஸ்லாமியன் என்ற பெயர்தாங்கிகளாக முஸ்லிம்  பெயரை வைத்துக் கொண்டு இருப்பதுதான் நமக்கு வேதனை . இவர் போல் பலர் . ஆனால் மற்றவர்கள் இவர்களைப் பார்த்து வழி கெடாமல் இருக்க வேண்டும் என்பதுதான்  நம் எண்ணம். 



(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (-1:4. அல்ஃபாத்திஹா திருக்-குர்ஆன்)
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மறந்து , பெயர் மட்டும் முஸ்லிம் பெயர் வைத்திருபவர்களை பெயர் தாங்கிகள்  என்றுதான் சொல்ல முடியும் .
நாம் மற்ற மதத்தினரை குறை காணும் எண்ணம் நமக்கு இல்லை .அது அவர்கள் வழி .

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
( -109 - ஸூரத்துல் காஃபிரூன் திருக்-குர்ஆன்)
இதுதான் இஸ்லாமிய வழி ,
1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல
(அல்ஃபாத்திஹா திருக்-குர்ஆன்)

No comments:

Post a Comment