Monday, January 7, 2013

‎18 கட்டளைகள்


18 கட்டளைகள் பிறப்பித்து 13 வயது மகனுக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த தாய்.
இங்கிலாந்தில் 13 வயது மகனுக்கு ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது என்பது போன்ற 18 கண்டிஷன்கள் போட்டு, கிறிஸ்துமஸ் பரிசாக ஐபோன் வாங்கிக் கொடுத்துள்ளார் ஒரு தாய். இதுகுறித்து ஒரு சுவையான செய்தி.

இங்கிலாந்து நாட்டில் 13 வயது Greg Hofmann என்ற சிறுவனுக்கு அவனுடைய தாயார், கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பரிசைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், தன்னுடைய தாயாரின் 18 கண்டிஷன்களை கேட்டு, மிகவும் அதிர்ச்சியடைந்தான்.


1. ஐபோனை பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது,
2.ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது,
3.இரவு ஏழு மணிக்கு மேல் பள்ளி நாட்களிலும்
4. விடுமுறை நாட்களில் இரவு 9 மணிக்கு மேல் பயன்படுத்தக்கூடாது,
5. தாய், அல்லது தந்தை போன் செய்தால் அழைப்பை மறுக்கக்கூடாது,
6.ஏதாவது ஒரு காரணத்தால் பழுதடைந்தால் பழுதுநீக்க பணம் கேட்கக்கூடாது,
7. அதிலுள்ள தொழில்நுட்பத்தை வைத்து அடுத்தவர் யாரையும் கேலி செய்யக்கூடாது,
8. வீட்டில் இருக்கும்போதே பெற்றோருக்கு இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்பக்கூடாது
9. ஆபாச இணையதளங்களை பார்க்கக்கூடாது
10. ரெஸ்டாரெண்ட், தியேட்டர் போன்ற இடங்களில் சைலன்ஸில் வைக்கவேண்டும்
போன்ற 18 கண்டிஷன்களை ஒரு பேப்பரில் எழுதி, மகனிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டாராம் அந்த தாய்.









  தகவல் தந்தவர் Rifaydeen Jamaldeen

No comments:

Post a Comment