Saturday, September 14, 2013

ஐம்புலன்களின் ஒற்றை மகுடம்

கருணைதான்
மனித குலத்தின் ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின் ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும் ஒற்றைக் கவசம்

கருணைதான்
ஐம்புலன்களின் ஒற்றை மகுடம்

கருணைதான்
உறவின் நட்பின் ஒற்றை அடிப்படை

கருணைதான்
வாழ்க்கைக்கான ஒற்றை ஆதாரம்

சாதுர்யமாகச் செயல்படுவதுதான்
சாதனை என்று நினைக்கிறார்கள்

கருணையோடு செயல்படுவதுதான்
மானுடம் காக்கும் அறிவுடைமை

கருணைதான் இறைவன்

கருணைதான்
இதயத்தில்
இறைவன் வசிப்பதற்கான
அத்தாட்சி
Source : http://anbudanbuhari.blogspot.in/

No comments:

Post a Comment