Monday, November 4, 2013

பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம்

பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம்
இறப்பு நிகழ இதயம் கணக்கும்
இறப்பு நிகழ கண்களில் நீர் சுரந்து கன்னத்தில் வழியும்
இவைகள் இறைவனால் அனுமதிக்கப் பட்டவை

இறப்பு நிகழ இறைவனை நினைத்து நாக்கினால்
இறந்தவருக்காக  மனம் உருகி  இறைவனை துதி செய்யுங்கள்
இறப்பு நிகழ கைகளால் வருத்திக் கொள்வதும்
இறப்பு நிகழ நாக்கினால் புலம்புவதும்
இறைவனால் தடுக்கப் பட்டவை

தன் நேசர்கள் இறக்க
இதயம் கணக்க
விழிகளில் நீர் வழிவதை தடுத்தல் வேண்டாம்

'நாம் இறைவனின் சொத்து
நாம் இறைவனிடம் ஒரு நாள் திரும்பியே
ஆக வேண்டும்'என அமைதிப் படுத்துங்கள்
இதுவே சிறப்பான ஆறுதல் மொழி

No comments:

Post a Comment