Friday, February 14, 2014

இறைவன் மீது வைத்த காதலே நிலையான காதல்

பெற்றோர்களின் திருமணம் ஒப்பந்தந்தால் வந்தது
பெற்றோர்களின் காதல் கல்யாணத்திற்குப் பின் வந்தது
பெற்றோர்களின் காதலின் இணைப்பால் வாரிசு வந்தனர்

தந்தையின் காதல் தாயின் மேல் தந்தை இருக்கும் வரை
தாயின் காதல் தந்தை மீது தாய் இருக்கும் வரை

பெற்றோர்களின் காதல் வாரிசுகள் மீது
பெற்றோர்கள் இருக்கும் வரை

வாரிசுகளின் காதல் பெறோர்கள் மீது
வாரிசுகள் இருக்கும் வரை

இத்தனை காதலும் நிரந்தரமல்ல
நிரந்தரமான காதல் இறைவன் மீது வைப்பதே

இறைக் காதல் கொண்டு இறை வழி வாழ்ந்தால்
இறைவன் மீது வைத்த காதல் இறப்பிற்குப் பின்னும் தொடரும்

இறைவனை நாடி நிற்கும் காதலால்
இறைவன் மீது வைத்த காதலே நிலையான காதல்
இறந்த பின்னும் தொடர்வதால்

No comments:

Post a Comment