Wednesday, June 18, 2014

24 - இஸ்லாமிய அமைப்புகளுக்கும்

தமிழத்தில் உள்ள
24 இஸ்லாமிய கட்சிகளும்
சில நேரங்களில் ஒன்று சேர்கின்றன.

அதாவது...
இஸ்லாமியனையோ/ இஸ்லாத்தையோ
சீண்டும்
ஏதாவது ஒரு திரைப்படத்தை
எப்பவாவது தடைசெய்யனும்
என்கிற கோரிக்கையோடு
நீங்கள் ஒன்று சேர்ந்து
வேகமாக கலாட்டா செய்வது நிஜம்தான்.

மற்ற நேரங்களில்
உங்களிடம் வாழும் பகைமை
அப்படியே
செழிப்பாகவே இருக்கிறது!

அதாவது...
'ஒற்றுமை' எனும் வார்த்தை
உங்கள் மண்டையில் ஏறுவதே இல்லை.

இப்போது
இங்கே
அந்த வார்த்தையை விளக்கமாய் சொல்லி
உங்கள் மண்டையில் ஏற்றப் போகிறேன்.

ஒற்றுமை:
'ஒ + ற் + று + மை = ஒற்றுமை'

24 - இஸ்லாமியக் கட்சிகளும்
ஒவ்வொரு தினம்
காலை மாலை வேளைகளில்
இதனை தவறாது
மனப்பாடம் செய்யுங்கள்.
ஒருவேளை
இது விளங்கினாலும் விளங்கிவிடும்.

இஸ்லாத்தை முன்வைத்து
தனிக் கடை போடாதீர்கள்
நீங்கள் லாபம் அடைய
இஸ்லாம் வியாபார பொருளல்ல.

கால நடப்பையும்
சூழ்நிலையின் இறுக்கத்தையும்
கொஞ்சமாவது யோசியுங்கள்.

                                                                Taj Deen

No comments:

Post a Comment