Monday, August 18, 2014

எல்லாமும் தருவோனே


நிறைவான ஒளியை
பார்த்து
பறந்துவரும் விட்டில்
புச்சிகள்

பார்க்காமலே நேசிக்கும்
பக்தர்கள்
அமைதி வழிநடக்கும்
அடியார்கள்

வணக்கத்தை காணிக்கையாக்கும்
நன்மக்கள்
உன்பக்கம் சார்ந்திருக் கும்
பலஹீனர்கள்

முற்றும் துய்த்து
முழுமையாய் வாழ்ந்து
உன்வழி நேர்வழி நடந்து
உன்னடி சேர
அருள் புரிவாயே
ரகுமானே
அருளைக் கேட்டேன்
தொழுகையை தந்தாய்
அன்பைக் கேட்டேன்
சகோதரத்துவத்தை தந்தாய்

செல்வத்தை கேட்டேன்
சக்காத்தை தந்தாய்
ஆரோக்யத்தை கேட்டேன்
நோன்பை தந்தாய்

நம்பிக்கையை கேட்டேன்
கலிமாவை தந்தாய்
எதுவுமே கேட்க்காமல்
என்னையே தந்தாய்

மனமுருகி கேட்போருக்கு
எல்லாமும் தருவோனே
ஏகனே இறையோனே

                     ஆக்கம்: ராஜா வாவுபிள்ளை (சங்கம் அப்துல் காதர்)

No comments:

Post a Comment