Monday, August 25, 2014

ஏகன் இறைவன் தந்த மார்க்கத்தை பற்றிக்கொள்..

மகனே ......

வாழப் பழகு
பழகப் பழக பழகும் பலவும்
பார்த்துப் பழகு

பார்த்துப் படி
படிக்கப் படிக்க படிப்பினைகள் பெறு

பேசு நேர்கொண்டு
மெய்யும் பொருளும் அறிந்து உரக்க பேசு

இரு உண்மையாய்
இருப்பதில் இறுதிவரை உறுதியாய் உயிர் கொண்டு இரு

செயல் படு
பாடுபட்டு செல்வம் சேர்
ஊருடன் ஒத்துவாழ்

கொடு கொடைகளை
கிடைத்ததை பகிர்ந்து பகிர்ந்ததை பார்த்து மகிழ்ந்திடு


வெற்றி கொள்
திறன்பட செயல்பட்டு வீரம் விளை
கயமையை கொ ல்

பொறுமையை கையாழு
சோம்பலை துரத்து பூமியை ஆளும் ஆற்றல் பெ று

மனிதம் பேணு
ஏற்ற தாழ்வு இல்லையென இயம்பு
மனிதம் புனிதம் மனிதநேயம் புண்ணியமென போற்று

இறைமையை நம்பு
ஏகன் இறைவன் தந்த மார்க்கத்தை பற்றிக்கொள்
தூதர் முகமது வழிநட

ஏகன் இறையோனின் தங்கு தடை இல்லா அரும் பெரும் ஆசிகள் என்றும் உண்டாகுமே!

ராஜா வாவுபிள்ளை (எஸ். எஸ். அப்துல் காதர்) 
நன்றி வாவுபிள்ளை ராஜா(எஸ். எஸ். அப்துல் காதர்)  அவர்களுக்கு

No comments:

Post a Comment