Monday, September 1, 2014

நானும் வெளிநாட்டு சம்பாத்தியக்காரன் ....

காரிருளும்
கடும் மழையும்
தண்ணீராய் ஊற்றும் வேர்வைதுளிகளும்
சுட்டெரிக்கும் வெயிலும்........................என்னை தீண்டுவதில்லை

என் .........
மகனின் படிப்பு
மகளின் திருமண செலவு
மனைவியின் ஆஸ்பத்திரி செலவு
தாயாரின் உடல்நிலை
தந்தையின் பராமரிப்பு
உடன் பிறந்தோரின் உள்வாங்கல்கள் ......மற்றும்
சுற்றுப்புறமும் சூழலும் ...............இவையெல்லாம்

என் கண்ணிலும் கல்பிலும் (மனதிலும் )நிறைந்திருக்கும் காரணத்தால் ....ஆம்

நானும் வெளிநாட்டு சம்பாத்தியக்காரன் ....

கத்தாரில் காரில் சற்று பயணிக்கும் போது கண்ட காட்சிகள் தந்த கலக்கம் இது.
Iskandar Barak
                                            Iskandar Barak

1 comment: