Monday, November 3, 2014

வேண்டியவை....! வேண்டும் .

வேண்டியவை....!

உயிரும் உரமும்
உடலில் வேண்டும்
ஈகையும் ஈரமும்
உள்ளத்தில் வேண்டும்

கனிவும் கண்ணியமும்
பார்வையில் வேண்டும்
கூ ர்மையும் நேர்மையும்
கணிப்பில் வேண்டும்



பணிவும் துணிவும்
பணியில் வேண்டும்
அன்பும் ஆதரவும்
மனையில் வேண்டும்

நளினமும் நேர்பாடும்
பேச்சில் வேண்டும்
வீரமும் தீரமும்
செயலில் வேண்டும்

நம்பிக்கையும் நாணயமும்
வியாபாரத்தில் வேண்டும்
விருப்பு வெறுப்பில்லாத
தீர்ப்பு வேண்டும்

அபரிமிதமான இறை
நம்பிக்கை வேண்டும்
அளவற்ற அருளானளின்
ஆசிகள் என்றும் வேண்டுமே!

                                                                                    ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment