Monday, December 15, 2014

பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது



பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது

அங்கு....

ஆசைகள் இல்லை
திருப்தி உண்டு

தேவைகள் எதுவும் இல்லை
அனைத்தும் அடங்கி இருக்கும்

மொழிகள் இல்லை
அர்த்ததங்கள் ஆயிரம் உண்டு

ஆரவாரம் எதுவும் இல்லை
நிசப்தம் நிறைந்து இருக்கும்

கவலைகள் எதுவும் இல்லை
நிம்மதி நிறைந்திருக்கும்

சிறகுகள் இல்லாமலே
மனம் சிறகடித்து பரந்திருக்கும்

தொடக்கமும் முடிவும்
திறந்தே இருக்கும்

ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment