Friday, February 6, 2015

மதினா

அமைதியும் சாந்தமும்
தவழும்
அமைதி இல்லம்.

புழுதிக்காற்றிலும்
இறைநேசம் தழுவும்
சொர்க்க பூமி.

மனதுக்கு நெருக்கமான
அணுக்க மலர்கள்
மலரும் தாய்மண்.

சாதனைத் தலைவர்
சன்னிதியில் சமர்ப்பணமாகும்
கண்ணீர் மாலைகள்,
நேசத்தின் சாட்சியாய்...
சிலையிலும் படங்களிலும்
அல்லாமல்,
சிந்தனையிலும் செயல்களிலும்
உணர்வுகளிலும் ஒழுங்குகளிலும்
நினைவு கூறப்படும்
சாதனைத் தலைவர்.

மொழிகளை வென்றவர்
நிறங்களை வென்றவர்
இனங்களை வென்றவர்
இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்
நிரந்தர தலைவர்.

உயிர்களும் உடமைகளும்
உதிரமும் உறவுகளும்
தாயும் தந்தையும்
சகலமும் அர்ப்பணமாக்கப்படும்
சாந்தத்தின் சொந்தக்காரர்...

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யா ஸய்யிதி யாரசூலல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யா ஸய்யிதி யா ஹபீபல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க
யா ஸய்யிதி யாரஹ்மத்துல்லில் ஆலமீன்....!!
நிஷா மன்சூர்

ரெளலத்துல் ஜன்னாவில் என் பிள்ளைகள் ஹாமீம்,ஃபாஹிமா
 நிஷா மன்சூர்

No comments:

Post a Comment