Monday, November 23, 2015

மழை நீர் ....சேமிப்பு எப்போதும் வேண்டும் !...

மழை நீரை சேமிக்க வழியில்லாததால் ...
பலரின் கண்ணீரை சேமிக்க வழியில்லையே !...

சொந்தமாய் வீடொன்று வேண்டுமென்றே ..
பலர் பள்ளத்தில் குடியேறி கைசேதப்பட்டார் !...

இயற்கையின் சீற்றத்தை தடுப்பார் யாரோ ?...
இடர்பாடின் வேதனையை குறைப்பார் யாரோ ?...

அரசியல் குடைக்குள் புகுந்துகொண்டு ...
அடுத்தவரை குறைபேசி திரிதல் கேடு !...


ஆதாயம் தேடுபவர் யார்தான் இல்லை ?...
அனுமானம் செய்வதெல்லாம் வெட்டி வேலை ?...

உன்னால்தான் ,என்னால்தான் என்பதெல்லாம் ...
ஒருவர் முதுகில் ஒருவர் குத்தும் பேச்சு !...

சிங்காரச் சென்னையாம் சாக்கடைச் சென்னை ..
வித்தாரச் சென்னையாம் ..வேதனைச் சென்னை !...

அணைகளில் தடுப்பை கட்டச்சொன்னால் ...
வீதிகளில் வீணே தடுப்பை கட்டிவைத்தார் !...

தூர் வார மறந்ததால் இன்று சேற் வாரும் அவலம் !..கேளீர் !...
பேர்வாங்க வருவோரோ ஓட்டுச் சீர் வாங்கத் துடிக்கிறார் !...பாரீர் !..

அவலங்கள் தீர்வது எளிதாயில்லை ...
அடுத்தடுத்து தொடரும் நிலையே !..காண்பீர் !...



J Banu Haroon 
- ஜே .பானு ஹாரூன்

No comments:

Post a Comment