Thursday, November 12, 2015

‎மனித‬ மனங்கள் பலவிதம்..

ஒருவன் அமைதியா இருந்தா என்னடா ஊமை குசும்பம்
போல இருக்கானேன்னு
சொல்ல வேண்டியது...

கொஞ்சம் பேசி விட்டால் என்னடா இவன் ரெம்ப வாய் சவடால்னு சொல்ல வேண்டியது..

கொஞ்சம் சந்தோஷமா இருந்தா ரெம்ப செழிப்போன்னு நினைக்க வேண்டியது...


சோகமா இருந்தா கதை முடிஞ்சுது போல அப்படின்னு நினைக்க வேண்டியது...

எதையாவது வாங்கி விட்டால் ஆட்டையை போட்டிருப்பானோ என்று நினைக்க வேண்டியது...

எதையாவது விற்று விட்டால் வேற போக்கு இல்லை போல என்று நினைக்க வேண்டியது....

எதையாவது எழுதினால் வேற வேலையில்லை அகராதின்னு சொல்ல வேண்டியது..

ஒன்றுமே எழுதாமல் இருந்தால் செத்தான்டா பாகருன்னு முடிவு பண்ணி சந்தோஷமாக குழியை தோண்ட வேண்டியது...


No comments:

Post a Comment