மன்னித்தே தண்டிப்பார்!
மனங்களையே வென்றெடுப்பார்!
உன்னிப்பாய் உணர்பவர்கள்
உவந்து வந்து தோற்பாரே!
குற்றங்கள் கூறாதார்
குறைகூறிப் பேசாதார்
மற்றெவரே ஆனாலும்
மதிக்கின்ற மாண்பாளர்!
தன்னடக்கச் சின்னமவர்
தாராள எண்ணமவர்
முன்னெடுக்கும் மாதிரிக்கே
முடிசூடா மன்னரிவர்!
கடன்பட்டும் அறம்செய்வார்
கருணையினால் உரம்பெய்வார்
உடன்பட்டார் மீதுயரும்
உட்பாசம் காட்டிடுவார்!
பகையறியார், வெறுப்பறியார்,
பண்புகளைத் தாமறிவார்;
மிகயுரையா மேலவரை
மேவிடுவோம் காலம்வரை!(15)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
----------------------------------------------------------------------------
1.Quba Masjid,2.Madhina city’s oldest palm groves
Yembal Thajammul Mohammad
ஏம்பல் தஜம்முல் முகம்மது
No comments:
Post a Comment