Monday, January 18, 2016

எல்லாமே உண்டு....!

எல்லாமே உண்டு....!
அறியாமையை வென்றுவிட
பகுத்தறிவு உண்டு
வறுமையை வென்றுவிட
திறமை உண்டு
பகைமையை வென்றுவிட
வீரம் உண்டு

நட்பை வளர்த்திட
அன்பு உண்டு
வெறுப்பை விரட்டிட
கனிவு உண்டு
வெறுமையை போக்கிட
உழைப்பு உண்டு
வலியை போக்கிட
வலிமை உண்டு
வாழ்க்கையை வாழ்ந்திட
நம்பிக்கை உண்டு
இம்மையை வாழ்ந்திட
முயற்சி உண்டு
மறுமையை அடைந்திட
இறைவணக்கம் உண்டு


ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment