Monday, May 23, 2016

அறிந்தவரை ....!

ஆதியும் அறிந்தேன்
அந்தமும் அறிவேன்
வாழ்கையை அறிந்தேன்
வணக்கத்தை அறிவேன்
வம்புகள் அறியேன்
வாய்மை அறிவேன் 
வாய்ப்புகள் அறிந்தேன்
வறுமையை ஒழித்தேன்
இருப்பதை அறிந்தேன்

வேண்டியதை நுகர்ந்தேன் 
மிஞ்சியதை பகிர்ந்தேன் 
இறுமாப்பை ஒழித்தேன்
நட்பு பாராட்டினேன்
துஷ்டனை விலக்கினேன்
இளையோரை ஊக்குவித்தேன்
மூத்தோரை மதித்தேன்
அறிந்தவரை அறிய வைத்தாயே 
உன்னொளி காண அருள்வாயே 
ஏகனே இறையோனே!

ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment