Sunday, July 31, 2016

திருமண (நிக்காஹ்)வாழ்த்துரை ....

Abdul Gafoor
 
 இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

இன்முக உறவுகளின்
பன்முக சங்கமத்திலும்
திரண்டு பொழிந்த
பேரிறைவனின் பேரருளாலும்
இரண்டு மனங்கள்
சுகமாய் இணைகிற
பாக்கியத்தினை பெற்று
இல்லற வாழ்க்கையில்
ஐக்கியத்தினை நாடினர் ....

இறை மறையாம்
குர்ஆன் எடுத்தியம்பும்
பாடங்களை முறையாக்கி
முகம்மது நபிகள் (ஸல்)
போதித்த அறிவுரைகளை
வாழ்க்கையதில் நிறையாக்கி
சாதித்த மணமக்களாய் ....

வாழ்க்கை ஏடுகளில்
அழகோவியம் தீட்டி
இதயக் கூடுகளில்
அன்போவியம் மீட்டி
புன்னகை முகங்களோடு
நேசம்தனை கூட்டி
உறவாடி உரையாடி ....

வளங்கள் பெருகும்
இல்லற வாழ்க்கையில்
ஏற்றமாய் பயணிக்கும்
களங்கள் கண்டு
சீரோடும் சிறப்போடும்
உளங்கள் குதூகலித்து
பேரானந்தமாய் வாழ்ந்திட
உளமார வாழ்த்துகிறேன் .....
Abdul Gafoor

அன்புடன்
அப்துல் கபூர்

No comments:

Post a Comment