Thursday, September 1, 2016

அருள்வாயே ஏகனே இறையோனே


மனிதம் பேணிட
மூத்தோரை மதித்திட
சிறாரை ஊக்குவித்திட
அருள்வாயே ஏகனே இறையோனே

நல்லோரோடு சேர்ந்திட
நாணயமாய் வாழ்ந்திட
எளியோரை அரவணைத்திட
அருள்வாயே ஏகனே இறையோனே


உற்றோரை பாதுகாத்திட
உறவுகளோடு நல்லுறவாட
பெற்றோருக்கு பணிவிடைசெய்திட
அருள்வாயே ஏகனே இறையோனே

உண்மையாய் உழைத்திட
இல்லாதாரோடு பகிர்ந்துண்ண
செல்வதைப் பெருக்கிட
அருள்வாயே ஏகனே இறையோனே

உன்னையே நினைந்துருக
உன்னிடமே அடைக்கலமாக
உன்னடியான் எனக்கும்
அருள்வாயே ஏகனே இறையோனே !

ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment