Sunday, September 4, 2016

சகன் சாப்பாடு ...


ஏகன் உணர்த்தும்
ஒற்றுமையின் மகிமையினை
கூட்டாய் பிரதிபலிப்பது
சகன் சாப்பாடு ...

ஏற்றத்தாழ்வு களைந்திட
முன்னோர்கள் உருவாக்கியது
தலைமுறைகளின் சுழற்சியில்
பின்னோர்கள் உருமாற்றியது ..
.
கூடி உண்டால்
உள்ளங்களில் நிழலாடும்
புகைச்சலும் பகைச்சலும்
ஓடி ஒளிந்திடும் ...

சகனில் பரத்தியதை
பகிர்ந்துண்ணும் பண்பாடு
கிழிந்த மனங்களுக்கு
தையலிடுவது கண்கூடு ...

ஊர்ந்திடும் விரல்களும்
கலகலக்கும் குரல்களும்
சகன் சாப்பாட்டின்
உன்னதத்தை மேம்படுத்தும் ...

சகன் தாலாவில்
பரப்பிய உப்புமா
சுவையோடு உண்போரின்
நாவுகளிலிருந்து தப்புமா ...

அப்துல் கபூர்


புகைப்படம் ...
உகாசேவா உறுப்பினர்களில் சிலர் காலை வேளையில் சகனில் ருசியான உப்புமா உண்ணும் மகிழ்வான காட்சி

No comments:

Post a Comment