Sunday, October 23, 2016

இறையச்சம் .../ அப்துல் கபூர்





இன்பமூட்டும் செல்வத்தின்
வாழ்மைப் படிகளிலும்
துன்பமூட்டும் வறுமையின்
ஏழ்மைப் படிகளிலும்
இறைவனை துதிப்பதும்
திருமுறை அறிவுறுத்தும்
கொள்கைகளை மதிப்பதும்
ஆத்மார்த்தமான இறையச்சம் ...

இழுக்கற்ற செய்கைகளில்
நம்பிக்கை வைத்தும்
அழுகற்ற இதயமதில்
பலமான உறுதியோடும்
இறைவனுக்கும் மானிடர்களுக்கும்
பாலமாக உருவாகுவது
வழுக்கற்ற இறையச்சம் ....
இறைத் தூதர்களின்
போதனைகளை மூலதனமாக்கி
சுவாசிக்கும் வாழ்க்கையில்
நன்னெறிகளை பெருக்குவதும்
நிலையான இறையச்சம் ....

அப்துல் கபூர்

No comments:

Post a Comment