Friday, October 28, 2016

உழைப்பெனும் வழிபாடு ....!

குத்துக்கல்லு போல
வாடாத இருப்பிருந்து
வாழ்வின்
வெம்மையையும் வளமையையும்
ஒருபொருட்டாய் கொண்டு
ஓடியாடி உழைத்திருந்தும்
சிறு மீனோ உறுமீனோ
வந்ததை வரவில் வைத்து
நில்லாமல்

ஒடுங்காலம் காலாகாலமாய்
ஓடிக்கொண்டே இருக்க
இருந்து இருந்து
இருப்பதையே
என்ன செய்ய
ஏதுசெய்வதென
எண்ணி எண்ணி
காலங்கடத்தாமல்
அலுங்காமல் குலுங்காமல்
இருக்காமல்
அல்லும்பகலும் அலைந்து
பொருளை தேடுவதே
படைத்தவனை மகிழ்விக்கும்
உழைப்பெனும் வழிபாடாகும்

ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment