Sunday, January 1, 2017

விடியும் பொழுதுகளில்

by. Gajini Ayub

விடியும் பொழுதுகளில்
வழிமாறா வழித் தடங்கள் வேண்டும் இறைவா ! 
புற்றீசல்களாய் பொய் நிலை புதிர்வாழ்க்கை
எதிர்திசையில் என்னை மறிக்கின்றன மண்ணில் தினந்தோறும் ..
எப்படி வெல்வேன் 
என்று மெய்ப்பட 
வழிதேடி விழி நோகி
வீழ்ந்து களைத்திட்டேனே
வீண்கழிந்த என் நாட்களின் பாவங்கள்
விடைகளின்றி தவிக்க
காணும் மெய்வாழ்க்கை கண்டுணர்ந்து வாழ
இனியேனும் மெய் தருவாய் நிறைவாய்
நின்றுணர்ந்து நீண்டழும் என் விழிகளுக்கு
விடை தா என் இறைவா !
ஏங்கித் தவிக்கும் ஏழை இதயத்திற்க்கு

இனிய வழி திற என்இறைவா !

Gajini Ayub

No comments:

Post a Comment