Sunday, January 29, 2017

நேற்றைய துன்பங்களை நினைத்து


தமிழ் பிரியன் நசீர்

நேற்றைய துன்பங்களை
நினைத்து
இன்றைய பொழுதினை
கவலைகளுக்குத்
தாரை வார்த்து விடாதே
நாளையென்பது
விடியலாம் அல்லது
விடியாமலும் போகலாம்
இன்று இந்த நிமிடங்கள்
உனக்கான இனிய சந்தர்ப்பம்
நழுவ விடாதே
விட்ட நொடிகளை
விழுந்து தொழுதாலும்
திரும்பப் பெற்றிட இயலாது
முடிந்தால் மகிழ்ச்சியை
பிறருக்கும் வழங்கி
நீயும் மகிழ்ந்து வாழப் பழகு ..!!

தமிழ் பிரியன் நசீர்

No comments:

Post a Comment