Wednesday, April 19, 2017

நட்புகள் மீது

நட்புகள் மீது
வெறுப்புமில்லை..
உறவுகள் மீது
பகையுமில்லை..
இருக்கும் என்று
அலட்டவுமில்லை..
இல்லை என்று
விரட்டவுமில்லை..

அருகில் இருந்தால்
பாரமுமில்லை..
தொலைவில் இருந்தால்
தூரமுமில்லை..
பேசி சிரித்தால்
வஞ்சனையில்லை..
பேசாதிருந்தால்
நிந்தனையில்லை..
ஒதுக்கி வைத்தால்
பாவமுமில்லை..
ஒதுங்கி இருந்தால்
தொந்தரவுமில்லை..

Saif Saif

No comments:

Post a Comment