Sunday, July 16, 2017

பாதை ….!

ஆசையின் பாதை அலைக்கழிக்கும் 
குற்றத்தின் பாதை குறுகுறுக்கும்
பொறாமையின் பாதை அழிவாகும் 
வெறுப்பின் பாதை பகையாகும்
அன்பின் பாதை அறமாகும்
பண்பின் பாதை குணமாகும்
முயற்சியின் பாதை வெற்றியாகும் 

அறிவின் பாதை ஞானமாகும்
உழைப்பின் பாதை உயர்வாகும்
சேமிப்பின் பாதை செல்வமாகும் 
நட்பின் பாதை நம்பிக்கையாகும் 
இறைவனின் பாதை சுவர்க்கமாகும்
நேர்மையின் பாதை நிறைவாகும் 
தியாகத்தின் பாதை வெற்றியாகும் 
தயக்கத்தின் பாதை தடங்கலாகும் 
துணிச்சலின் பாதை வீரமாகும்
முதிர்ச்சியின் பாதை அனுபவமாகும் 
பக்குவத்தின் பாதை பொறுமையாகும்
இல்லறத்தின் பாதை விட்டுக்கொடுத்தலாகும் 
நல்லறத்தின் பாதை பகிர்ந்துண்ணலாகும்

ராஜா வாவுபிள்ளை  

No comments:

Post a Comment