Tuesday, August 1, 2017

"நான்" என எனைக்கருத

"நான்" என எனைக்கருத 
உட்புகும் ஆழிப்பேரலை
என் நிலைகளை தாக்கி
பேரழுத்தத்தை தருகிறது
"நான்" யென்பதன் 
நிஜத்தைப்புரிந்து
அதன் 

பிரபஞ்சப்பெருவெளியில் கரைவது
காற்றினிலே பறக்கும் 
வண்ணத்துப்பூச்சியைப்போல
வண்ணங்களையும் 
எண்ணங்களையும் அழகுபடுத்தி
உள்ளங்களை 
வெளிச்சப்படுத்தி
பிரகாசமான ஒளியை உதயமாக்கி 
சுடரொளி வீசுது !!
- யாரோ

No comments:

Post a Comment