Thursday, August 17, 2017

காலங்களுக்கு பொய்......../ தமிழ் பிரியன் நசீர்

காலங்களுக்கு
பொய்........
வர்ணங்களை
காணிக்கையாகத்
தந்து.........்
எங்கள் கனவெனும்
ஓவியங்களை
வரைந்து ..........

முடிக்கவே
கற்பனைத்
தூரிகைகளை
கையோடு
எடுத்து வந்தோம்........
கனவுகள்
மெய்பட்டன
வரைந்து முடிக்கப்பட்ட
அழகிய ஓவியங்களுக்கு
முதுமையெனும்
கேடயங்களை
ஏந்தியவாறு
எங்கள் பயணங்கள்
நிறைவடைகின்றன..!!

தமிழ் பிரியன் நசீர்

No comments:

Post a Comment