Saturday, August 26, 2017

ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்

ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் 
எண்ணிலடங்காதது தான்
அதற்கான கூலியை 
ரப்புல் ஆலமீன் தரட்டுமாக !!
யா அல்லாஹ் ..
நீ ரஹ்மான் 
நீ ரஹீம்
உன் கருணை 
உன் கோபத்தை வென்றுவிடுவதாக
நீயே சொல்லியிருக்கிறாய்.

உன் உள்ளமை 
பரிபூரணமானது.
யா அல்லாஹ் ..
அனைத்தையுமே படைத்தவனே
அனைத்தையும் பரிபாலனம் செய்பவனே
எங்களை மன்னித்து 
எங்களுக்கு அருள்புரிவாயாக ...
லாஇலாஹா இல்லா அன்த சுப்ஹானக்க 
இன்னீ குன்த்தும் மினல்லாலிமீன் !!
குறிப்பு :
ஒ மனிதா ...
உன்னை குதறிய உளிகளை 
மன்னித்துவிடு.
நீ சிற்ப்பமாக 
இறைவன் படைத்த கருவிகள் அவை.
- யாரோ

அ.மு.அன்வர் சதாத்

No comments:

Post a Comment