Wednesday, September 27, 2017

அசைவில்லா சுழற்சி ....!


தொடர் சுழற்சியின்
அசைவுகள் உணரப்படாமலே
ஆணி வேர் ஆளம்தொட்டு
நிலைத்து நிற்பதாக
எண்ணத்தில் மமதைகொண்டு
மனக்கோட்டை பலவும்
அந்தரத்தில் கட்டிக்கொண்டு
அடுத்தவரை குறைசொல்லி
தூரவிலக்கி தூக்கியெறிந்து
அவகாசம் கொடுக்காமல்
தான்மட்டும் சரியென
சுடுசொல் உமிழ்ந்து
அமைதிப்பட்டு விட்டதாக
இறுமாப்பு கொள்கிறான்

தனிமைப் படுத்தப்பட்டதை
அறியாமையினால் அறியாமலே
அவனும் ஒருநாள்
தரைமட்டத்தின் அடியில்
புதைந்த பின்னரும்
பூமியின் சுழற்சியில்
அசைவுகள்
உணரப்படுதில்லையென அறிவானோ?

ராஜா வாவுபிள்ளை

No comments:

Post a Comment