Thursday, March 1, 2018

சிரியா வழிச் சிந்தனைகள்

முஸ்லிமே
முஸ்லிமைக் கொல்லும்
முஸ்லிம் அவலமா?

உன்னிடம்
அஸ்ஸலாமு அலைக்கும்
(அன்பும் அமைதியும் நிறைக)
அழிந்து போனதா?



அல்லாஹூ அக்பர்
(இறைவன் மகா பெரியவன்)
அர்த்தமிழந்து போனதா?

பிஸ்மில்லாகிர் ரக்மானிர் ரகீம்
(அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோனின்
திருப்பெயரால்)
செத்துப் போனதா?

உலக முஸ்லிம்களே
நீங்கள் எல்லோருமே
உண்மை முஸ்லிம்களாய்
எப்போது மாறுவீர்கள்?

இந்த
உலக வாழ்வின்
முன்மாதிரிகளாய்
முகம்மது நபிகளாய்
எப்போதுதான் ஆவீர்கள்?

அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in

No comments:

Post a Comment