மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அஸ்திவாரமாகும். இதுவே இஸ்லாமியக் கடமைகளில் முதற்கடமையும்,
இதற்குரிய சரியான பொருள், உண்மையில் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும்.
அறிந்துகொள்வீராக! தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். (39:3)
கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாக அவனையே வணங்க வேண்டுமென்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள். (98:5)
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனேதன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. (18:1)

