Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, February 24, 2014

தமிழக முஸ்லிம்கள்

தமிழக முஸ்லிம்கள் - சிறப்புத் தொடர்
                                                                        Picture Source


தமிழக முஸ்லிம்களுடைய சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் அம்சங்களை பல்வேறு கோணங்களிலும் அலசும் பிபிசி தமிழோசையின் சிறப்பு பெட்டகத் தொடர். இத்தொடரைத் தயாரித்து வழங்குபவர்
த.நா.கோபாலன்.
பிபிசி யிலிருந்து பாகம் 1லிருந்து 10 வரை  மீடியாவில் கேட்க
நன்றி
Source

Monday, July 4, 2011

குரூர மனச் சிந்தனையாளர்கள்

ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது? அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை 'சித்திரவதை' எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.

Wednesday, December 15, 2010

சிந்தையில் ஹைக்கூ இரா .இரவி


Fun 
& Info @ Keralites.net
சிந்தையில் ஹைக்கூ  இரா .இரவி
பெரிய மீன்கள்
சின்ன மீன்களைத் தின்றது
அரசியல்

இலவசங்களால்
வசமாக்கி திருடினர்
மூளையை

மாற்றுங்கள் பெயரை
தொலைக்காட்சி அன்று
தொல்லைக்காட்சி என்று

பதக்கங்கள் பெற்றும்
பெருமை இல்லை
மேடையில் கொலைபாதகன்

நிதிக்கு அதிபதியானால்
சில நீதிபதியும்
உன் வசம்

இயக்கையைச் சிதைக்க
மனித இனம் சிதைந்தது
சுனாமி

பெண்கள் இட ஒதிக்கீடு
உள்ஒதிக்கீடு  இருக்கட்டும்
மன ஒதிக்கீடு தருக

பெரிய மனிதர்களிடமும்
சின்னப்புத்தி வளர்க்கும்
சின்னத்திரை

குழந்தைகளுக்குக் கொடுக்கும்
குச்சி மிட்டாய்
வாக்களிக்கப் பணம்

கோடிகள் கொள்ளை அங்கே
வறுமையில் தற்கொலைகள் இங்கே
வலிமையான பாரதம்

முதலிடம்
பெண்களை அழவைப்பதில்
தொலைக்காட்சிகள்

பித்தலாட்டம்
மூலதனம்
ராசிக்கல் சோதிடம்

விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம்
ஆபாச நிகழ்ச்சிகளுக்கு
செந்தமிழ்ப்பெயர்

வேதனையிலும் வேதனை
போகப் பொருளாகச் சித்தரிப்பதை
பெண்களே ரசிப்பது

குடியால் கோடிகள்
குடிமகன் தெருக்கோடியில்
குடு்ம்பம் நடுத்தெருவில்

நல்ல முன்னேற்றம்
சீருடையில் மாணவன்
மதுக் கடையில்

என்று தெளியுமோ
போதையில் பாதை மாறிய
தமிழன்

விளைநிலங்களும்
மின்சாரமும் இலவசம்
வெளிநாட்டவர்க்கு

விரைவில் கிட்டும்
உலக அளவில் முதலிடம்
ஊழல்

கொடிகளை விட
கோடிகளே முக்கியம்
அரசியல்

சமாதானமானார்கள்
சண்டையிட்டப் பெற்றோர்கள்
குழந்தையால்

முந்தைய சாதனையை
முறியடித்தனர் அரசியல்வாதிகள்
மெகா ஊழல்

யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினாள் பூக்காரி 

இரா .இரவி
Source : http://eraeravi.wordpress.comசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி

Thursday, November 18, 2010

2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு திமுகவுடன் தொடர்பு

புது தில்லி : ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்காக ராசா பதவி விலகினாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு ஆணையம் லைலென்ஸை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ள 5 முக்கிய நிறுவனங்களில் ஒன்றுக்கு தமிழ்நாட்டுடன் அதிலும் குறிப்பாக திமுகவுடன் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.


சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்வான் டெலிகாம் ஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றது. ஸ்வான் டெலிகாம் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல நிறுவனமான ஈ.டி.ஏ ஸ்டாருக்கு ( ETA Star) சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பல கட்டுமான பணிகளை செய்து வரும் இக்குழுமத்தின் நிறுவனர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை வாங்கிய ஸ்பான் டெலிகாமிடமிருந்து 9 மாதங்கள் கழித்து துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸலாட் (Etisalat) 45% பங்குகளை அதிக விலலக்கு வாங்கி எடிஸலாட் டி.பி (Etisalat DB) என பெயர் மாற்றம் செய்தது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் இதற்கு ஒரு வாரத்திற்கு முன் அதாவது செப்டம்பர் 17, 2008ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஜெனிக்ஸ் எக்ஸிம் (Genix Exim) வெண்டர்ஸ் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.
அதிர்ச்சியளிக்கும் விதமாய் மூன்று மாதங்கள் கழித்து டிசம்பர் 17, 2008 ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எடிஸலாட் டி.பி.யிடமிருந்து வாங்கியுள்ளது. அதே சமயத்தில் பணம் எங்கிருந்து திரட்டப்பட்டது என்பதற்கு எவ்வித கணக்கு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஜெனிக்ஸ் எக்ஸிமை எடிஸலாட் டி.பியில் ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிபர் சையது சலாஹூதினின் மகன் அஹமது சலாஹூதின் பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் திமுக அரசுக்கு சாதகமான ஒன்று என்பதும் காஞ்சிபுரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட தமிழக அரசின் பல திட்டங்கள் இக்குழமத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட கூடிய ஒன்றாக உள்ளது.
சென்னை அருகே 450 ஏக்கர் பரப்பில் ஒரு நகரம் ஈ.டி.ஏ ஸ்டார் குழுமத்தால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. தமிழக அரசின் தலைமை செயலகமும் இக்குழுமத்தால் தான் கட்டப்பட்டது. தமிழக அரசின் மூலம் கிடைத்த இத்திட்டங்களுக்கு கைமாறாக சில மாதங்களுக்கு முன் இக்குழமத்துக்கு சொந்தமான சென்னை சிட்டி செண்டர் (City center - Chennai) தமிழக அரசின் ஆளும் குடும்ப பிரமுகர் ஒருவருக்கு கைமாற்றப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
Source :http://www.inneram.com/2010111811972/2g-spectrum-scam-dubai-company-linked-to-dmk

Thursday, November 4, 2010

மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா? - கடைசி தேதி நவம்பர் 9

 தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும்.  ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும்.  முஸ்லீம் பட்டதாரிகளே! ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும். வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். வாக்காளர் பட்டியலில் சேர்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டுவிடவேண்டாம். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அன்பிற்கினிய சகோதர்களே! உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இதன் அவசியத்தை விளக்கி இந்த மேல்சபை வாக்காளர்பட்டியலில் சேர சொல்லுங்கள்.
 
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்
 
எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
 
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download)  செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.
 
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
 கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
 
 மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம்.  சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.
 
மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html  தெரிந்துகொள்ளலாம்.
mail from : from    நபி நேசன்

Thursday, September 30, 2010

நீங்கள் நீதிபதியானால் !!!உங்கள் தீர்ப்பு ? சொடுக்கி படித்து பாருங்கள்

Posted: 30 Sep 2010 11:39 AM PDT
அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள "வினவு" தளத்துக்கு நன்றி!


”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது.





http://maniblogcom.blogspot.com/2010/09/blog-post_7527.html

vote please 

--
எனக்கு வந்த மெயில்
---------------------------------------------------------------------------------------------------------------------
பாபரி மஸ்ஜித் தமிழ் பாடல்

Thursday, September 16, 2010

பணியும் மனிதன் ....! இது எதர்க்கு !

                                இது போல் எத்தனையோ படம்....

பிறரிடம் உதவியை மனிதன் ஏற்கமாட்டான். சுயகௌரவம் அதிகம். .....
மனிதனின் துன்பங்களுக்கு விடை கிடைக்குமா என்று அண்ணாந்து ....
இயக்க ரீதியான கட்டுபாடுகளுக்கு பணியும் பண்பு உடைய மனிதன். ...
அற்ப பணத்திற்காக பணத்திற்கு மயங்கும் சுயநலவாதியாகிவிட்டான்.

கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன். .

 

 


Saturday, July 31, 2010

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்.

 தனக்குத் தானே தவமிருக்கக் கட்டிக் கொண்ட கூட்டில் முட்டி மோதிக் கொண்டிருந்தது அந்த உயிர். மெல்ல மெல்ல, உறுதியாக தன் போராட்டத்தில் வழியும் கண்டது. அந்தக் கூட்டில் இப்போது சிறு திறப்பு (துளை) ஒன்று உருவானது. அந்தத் துளையின் வழியே அதன் இளஞ்சிறகுகள் வெளிப்படத் தொடங்கின. ஆம், இனியும் அது புழுவல்ல. எல்லோராலும் விரும்பப்படுகிற வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப்பூச்சி விரும்பப்படுவதற்கு அதன் சிறகுகளல்லவா காரணமாக இருக்கின்றன.

சிறகுகள் வந்துவிட்டால் பறக்கலாம். உலகத்து மலர்களில் தேன் உண்ணலாம். பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவலாம். இதோ, முழுதாக வெளிப்பட இன்னும் சற்றுகாலம்தான். அதன்பின் அது, தன் உலாவால், இந்தப் பூங்காவையே அழகுபடுத்திவிடலாம்.

சிறகுகள் சுதந்திரத்தின் குறியீடல்லவா!

அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டும், போராட்டத்தைக் கைவிட்டுவிடாமலும், அந்த உயிர் முயற்சி செய்துகொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த மனிதன் அதைப் பார்த்தான். அவனுக்கு மிகுந்த இரக்க மனம். "அடடா, இந்த வண்ணத்துப்பூச்சி வெளிப்படுவதற்கு இத்தனைப் போராட்டம் நடத்துகிறதா?" அவன் வியந்தான். உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்துவந்தான்.

அந்த கூட்டின் திறப்பை நுனியில் கத்தரித்து, அந்தத் துளையை பெரிதாக்கினான். அவன் எண்ணியபடியே, அந்த வண்ணத்துப்பூச்சி எளிதாக, உடனடியாக வெளிவந்தது. ஆனால்... ஆனால் ... அதன் உடல் வீங்கியிருக்க... சிறகுகள் சுருங்கியே இருந்தன. முழுவளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

அவன் அந்த வண்ணத்துப்பூச்சியை கவனிக்கத் தொடங்கினான். இதோ, எந்தக் கணமும் அதன் சிறகுகள் விரிந்து அதன் அற்புதமான அந்தப் பறத்தல் நிகழும் என்று அவன் நம்பினான்.

அப்படி ஏதும் நடக்கவில்லை.அந்தப் பூச்சியால் பறக்கவே இயலாது போயிற்று. வீங்கிய உடம்புடனும் சுருங்கிய இறக்கைகளுடனும் அது ஊர்ந்தபடியே இருந்தது. இனி காலத்துக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்வதைப் போல அதன் ஊர்தல் இருந்தது.

உண்மையில், தவறு செய்தவன் அந்த மனிதன் தான். தன்னுடைய இரக்க உணர்ச்சியால் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் பெறும் போராட்டத்தில் தடை ஏற்படுத்தினான். அறியாமல் செய்த பிழை.

உடம்பிலிருந்து பாயும் திரவமொன்று சிறகுகளை உந்த, சிறகுகள் மெல்ல வலிமை பெற்று, கூட்டினை முட்டித்தள்ள, அது வெளிவருவதற்கான போராட்டம் மட்டுமல்ல. இணைச் சிறகுகளை வரமாகவே வழங்கும் இயற்கைத் தவத்தின் வழிமுறை; முடிவும் கூட.


ஆம். சில நேரங்களில் நமது தேவை போராட்டங்களிலிருந்தே கிடைக்கிறது. எந்தச் சிரமமுமின்றி எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால், அவை மதிப்பற்றுப் போய்விடாதா? போராட்டங்கள் அல்லவா வலிமையை சேர்க்கவும் நம்மை உணர்த்தவும் செய்கின்றன.

இறைவனிடம் வலிமையை வேண்டினேன்.
அவனோ, துன்பங்களைத் தந்தான். அதனால் வலிமை கிடைத்தது.

இறைவனிடம் அறிவைக் கேட்டேன்
அவனோ, பிரசினைகளையே அளித்தான். அவற்றை தீர்க்கத் தீர்க்க அறிவு மேம்பட்டது.

இறைவனிடம் செல்வச் செழிப்பைக் கேட்டேன்
அவனோ, திட்டமிடும் மூளையையும், உழைக்கும் கரங்களையும் கொடுத்தான். அவற்றைக் கொண்டே செழிப்பைப் பெற முடியும் என்பது புரிந்தது

இறைவனிடம் தைரியத்தைக் கேட்டேன்.
அவனோ, ஆபத்துகளைத் தந்தான், கடந்தால் கிடைப்பது தைரியம் அல்லவா

இறைவனிடம் அன்பைக் கேட்டேன்
சிரமப்படும் மனிதர்களைச் சுட்டினான். அவர்களுக்கு உதவிட, அன்பின் பொருள் புரிந்தது

"இறைவா! சலுகைகளைத் தா" என்று வினவினேன்.
பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை அளித்தான் அவன்.

நான் கேட்டது அப்படியே கிடைக்கவில்லை!
ஆனால், எனக்குத் தேவையான எல்லாமே கிடைத்தன.

இறைவனுக்கே எல்லாப் புகழும்

அவனே பெரும்பாக்கியம் உடையவன். மிக அழகான படைப்பாளன்.(அல்குர்ஆன் 23:14)

Source : http://ezuthovian.blogspot.com/2010/04/blog-post.html

LinkWithin

Related Posts with Thumbnails