மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400 ஆண்டுகளுக்குமுன் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகையில்:“அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான் ...” (24:45) என்றும்
“... நாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் நீரை வாழ்வின் மூலாதாரமாக்கினோம் ...” (21:30) என்றும் கூறுகிறான்.