Showing posts with label அறுசுவை. Show all posts
Showing posts with label அறுசுவை. Show all posts

Monday, September 29, 2014

சமையல் எக்ஸ்ப்ரஸ் 100 கட்டுரைகள்

கைமா நூடுல்ஸ்
View

சுட்ட கத்தரிக்காய் சம்பல் (பேச்சுலர்ஸ் சமையல்)

View

கோழிக்குழம்பு

View

மிளகுக்கறி (பேச்சுலர்ஸ் சமையல்)

View

இறால் மசாலா

View

நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்)

View

அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)

View

மாசி தொக்கு

View

ஓட்ஸ் ரவா தோசை oats dhosa

View

கறிவேப்பிலை சாதம்

View

காலிப்ளவர் பிரியாணி

View

பிரியாணி பிரட் ஆம்லெட்

View

கோபி ரைஸ்

View

வாழைப்பூ பீட்ரூட் வடை

View

தேங்காய் சாதம் (ப்ரைட் ரைஸ்)

View

தக்காளி சாதம்

View

ஷாஹி வெஜ் பிரியாணி

View

ப்ளைன் சிக்கன் பிரியாணி

View

சிக்கன் கிரேவி நூடுல்ஸ்

View

பிஸ் ப்ரைட் ரைஸ்

View

பலாபழ போண்டா மற்றும் தோசை

View

டொமெட்டோ நூடுல்ஸ்/ tomato noodles

View

கொத்து புரோட்டா

View

பீர்க்கங்காய் காராமணி குழம்பு

View

ஆப்பம்

View

ஆனியன் ரைஸ்

View

டொமெட்டோ ரைஸ்

View

வெங்காய பாவற்காய் பொரியல்

View

காஜர் ரைஸ்

View

சிக்கன் லேயர் பிரியாணி

View

புடலங்காய் சாதம்

View

நாசிகோரிங்

View

வெண்டைக்காய் புளிகறி/ வெண்டைக்காய் மண்டி

View

நண்டு மசாலா

View

இறால் 65

View

பெப்பர் சிக்கன்

View

சிம்பிள் தேங்காய் சாதம்

View
  ஆமினா
நன்றி  http://samayalexpress.blogspot.in/
Amina Mohammed

Monday, September 10, 2012

பயனுள்ள சமையல் குறிப்புகள்!

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது.  இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

Sunday, August 15, 2010

நோன்புக்கஞ்சி

நோன்புக்கஞ்சி
ரமளான் இஃப்தாரின் சிறப்பு உணவான நோன்புக்கஞ்சி செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும்போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேராமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் அரிய உணவாகும்.

தேவையானவை:
  • பச்சரிசி = 400-500 கிராம்
  • கடலைப்பருப்பு = 50 கிராம்
  • வெந்தயம் = 50 கிராம்
  • பூண்டு = 6-7 பற்கள்
  • இஞ்சி+பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி
  • ஜீரகத்தூள் = 2-4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் = சிறிதளவு
  • மிளகாய்த்தூள் = சிறிதளவு
  • உப்பு = தேவையான அளவு
  • கறி மசாலா = 1 தேக்கரண்டி
  • சமையல் எண்ணை = தேவையான அளவு
  • தக்காளி = 2-3 பழங்கள்.
  • வெங்காயம் = 2-3 அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் = தேவைக்கேற்ப
  • புதினா-மல்லி = தேவையான அளவு
  • எலுமிச்சை = 1 பழம்
  • தேங்காய்ப் பால் = 300 மில்லி
  • ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பு = 100-200 கிராம்.
செய்முறை:

  1. அரிசியுடன் கடலைப் பருப்பையும், வெந்தயத்தையும் கலந்து நன்கு கழுவியபின் தண்ணீரை வடித்து, கழுவியவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பைத் தண்ணீரில் கழுவி மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,  உப்பு, இஞ்சி பூண்டு (பேஸ்ட்) சிறிதளவு கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  3. தக்காளி, வெங்காயத்தை ஸ்லைசாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. புதினா, மல்லி, மிளகாய் ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.
  5. சட்டியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சமையல் எண்ணையை தேவையான அளவுக்கு விட்டு சற்று சூடான பிறகு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
  6. வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி சுத்தம் செய்து தயாராக இருக்கும்  ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்யையும் சேர்த்து  தேவையான அளவு ஜீரகம், மசாலாத்தூள் கலந்து கிளறி தொடர்ந்து வதக்கவும். தேவைக்கேற்ப பச்சைப்பட்டானி,கேரட்,பீன்ஸ் ஆகியவற்றையும் வதக்கும் போது சேர்த்துக் கொள்ளவும்.
  7. தேவைப்பட்டால் சிறிதளவு தயிர்/யோகர்ட் கலந்து வதக்கவும்.
  8. புதினா-மல்லி, மிளகாய் ஆகியவற்றைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.
  9. சட்டியின் அடி பிடிக்காதவாறு தீயை தேவையான அளவு வைத்துக் கொண்டு 1:3 விகிதத்தில் தண்ணீரைக் கலந்து கொதிக்க விடவும்.
  10. கொதித்துக் கொண்டிருக்கும்போதே வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சின்னஞ் சிறு துண்டுகளாக்கிச் சேர்த்து கொதிக்க விடவும்.
  11. அடுப்பின் தீயை சற்று ஏற்றி மசாலா கலவையுடன் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.
  12. கொதிக்கும் கலவையில் வெந்தயம், கடலைப் பருப்பு கலந்து ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து சட்டிக்குள் மெதுவாக இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  13. கொதித்துக் கொண்டிருக்கும்போதே பாதியளவு எலுமிச்சை பழத்தை கொட்டைகள் நீக்கி சாற்றை பிழிந்து சட்டியில் இடவும்.
  14. அரிசி புழுங்கியதும், தேங்காய்ப்பாலை தேவையான அளவு சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.
  15. தேவையான அளவு உப்பிட்டு அகப்பையினால் கிளறி சட்டியின் அடிப்பாகம் பிடித்திருந்தால் நன்கு கிளறி மேலும் தண்ணீர் கலந்த தேங்காய்ப்பாலை இட்டு கிளறவும்.
  16. புதினா இலைகளை மட்டும் தனியாக வெட்டியெடுத்து கஞ்சியில் தூவி, அடுப்பை மிகவும் குறைத்து நன்கு சட்டியை மூடிவைக்கவும்.
  17. பரிமாறும் முன் அடுப்பை அணைத்து சட்டியைத் திறந்தால் கமகம மூலிகைக் கஞ்சி தயாராக இருக்கும்.
பின்குறிப்பு: சைவப்பிரியர்கள் ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பைத் தவிர்த்து இதே செய்முறையை பின்பற்றலாம். கஞ்சியுடன் பேரிச்சம் பழத்தைக் கடித்துக் கொண்டே கஞ்சியைக் குடித்தால் இனிப்பும் காரமும் கலந்து வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம்.
ஆக்கம் : அபூ அஸீலா
Source:http://www.satyamargam.com/627

LinkWithin

Related Posts with Thumbnails