Dr. Ahmad Baqavi Ph.D.
ஹதீஸ் கலை
الفرق بين الحديث والسنة والأثر
இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம்
இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன..
அதிலும் குறிப்பாக புகாரி, முஸ்லிம் போன்ற நூல்கள் முழுமையாக வெளிவந்துவிட்டன. இது தமிழ் உல கிற்கும், குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அருளாகும். ஆகவே, அனைவரும் அவற்றைப் படித்து தம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
அவற்றைப் படிக்கும் போது ஹதீஸ் கலையுடன் தொடர்பான சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். அப்போதுதான் அவற்றின் மூலம் பயன் பெற முடியும். எனவே, ஹதீஸ் நூற்களிலும், ஏனைய இஸ்லாமிய நூற்களிலும் காணப்படும் சில சொல் வழக்குகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஹதீஸ், ஸுன்னத், கபர், அதர், ஹதீஸுல் குத்ஸி ஆகிய 5 சொல் வழக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை முதலில் பார்ப்போம்.
1. ஹதீஸ்:
الحديث
ஹதீஸ் என்னும் சொல்லிற்கு அகராதியில் புதியது, செய்தி என்பது பொருளாகும். மார்க்க வழக்கில் நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம், பண்பாடுகள், அங்க அடையாளங்கள் தொடர்பான செயதிகளுக்கு சொல்லப்படும், அவை நபித்துவத்திற்கு முன்னரோ, பின்னரோ இடம் பெற்றவையாக இருக்கலாம்.
மேற்படி வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ‘ஸுன்னத்’ என்ற வார்த்தையை விட விரிவான, ஆழமான விளக்கம் கொண்டதாகவே ‘ஹதீஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.
அதேவேளை ‘ஸுன்னத்’ என்பது நபித்துவத்திற்குப்பின்னர் நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய சட்டங்கள், மேற்கொண்டு வந்த இபாதத்துக்கள் போன்றவற்றை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஹதீஸ் – ஸுன்னா இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடாகும்.
Showing posts with label அல் குர்ஆன். Show all posts
Showing posts with label அல் குர்ஆன். Show all posts
Monday, August 27, 2012
Thursday, June 30, 2011
அல் குர்ஆன் ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புகள் (ஆடியோ) القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع الاستماع للتلاوة
அல் குர்ஆன் ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புகள் (ஆடியோ) பொறுத்தவரையில் القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع الاستماع للتلاوة
For AL Quran Recitations & Translations (Audio)القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع
الاستماع للتلاوة
தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள் please click here : Quran Explorer – [Sura : 1, Verse : 1 - 7]
Labels:
அல் குர்ஆன்,
ஆடியோ,
ஓதுதல்,
மொழிபெயர்ப்புகள்
Subscribe to:
Posts (Atom)
