Showing posts with label இமாம் ஹுசைன். Show all posts
Showing posts with label இமாம் ஹுசைன். Show all posts

Monday, December 5, 2011

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை..... வெள்ளிக்கிழமை


கண்கள் குளமாகி நெஞ்சம் ரணமாகி.... ........முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை வெள்ளிக்கிழமை நண்பகல். கடுமையான சூரிய மழையில் நனைந்து,வியர்வை வெள்ளத்தை வடித்துக்கொண்டிருந்தது இமாம் ஹுசைனின் உடல். தாங்கிக்கொள்ள முடியாத உயிரிழப்புகள் எல்லாம் கண்முன்னால் நிகழ்ந்துவிட்ட கொடூரத்தை எண்ணி கண்களிலிருந்து கண்ணீரும் எதிரிகளின் அம்புகள் பாய்ந்த புன்களிலிருந்து செந்நீரும் வழிந்து கொண்டிருந்த இமாம் ஹுசைனின் தலையின்மீது வாளால் வெட்டினான் - நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட மாலிக் பின் சபர் என்பவன். இமாம் ஹுசைனின் உச்சந்தலையில் ஆழமாக இறங்கியது வாள்.கொப்பளித்து வந்த ரத்தத்தில் ஹுசைனின் முகம் ஒழுவெடுத்துக் கொண்டிருந்தது. உடலெங்கும் எதிரிகள் வீசிய நூற்றுக்கணக்கான அம்புகள் பாய்ந்து வழிந்த ரத்தத்தில் ஹுசைனின் பூவுடல் குளியல் நடத்திக்கொண்டிருந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails