Showing posts with label இஸ்லாமியச் சட்டம். Show all posts
Showing posts with label இஸ்லாமியச் சட்டம். Show all posts
Friday, February 7, 2014
இஸ்லாமியச் சட்டம் - நீடூர், A.M.ஸயீத்
இஸ்லாமியச் சட்டம்
நீடூர், A.M.ஸயீத்
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: 'இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி இழைப்போராவர்.' (2:229) உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியானாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற கம்யூனிஸ ஆட்சியானாலும் அங்கே சட்டங்கள் அவசியமாகின்றன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், போன்ற பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு நாடுகளில் இது போன்ற பரவலாகக் காணமுடியாது. மதச்சார்பற்றக் கொள்கையை பாரதம் பின்பற்றி வருகிறது. மதங்களின் தனிப்பட்ட சட்ட திட்டங்களில் தலையிடாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே விடுதலை வாங்கித் தந்தவர்களின் கனவாக இருந்தது.
'தனியார் சட்டம்' (PERSONAL LAW)என்பது, அந்தந்த மதங்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஹிந்து மகவேற்புச் சட்டம் (THE HINDU ADAPTATION ACT) ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து இறங்குரிமைச் சட்டம் (THE HINDU SUCCESSION ACT) ஆகியன ஹிந்து சமயத்தாரை மட்டுமே கட்டுப்படுத்தும். இதே போல முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் முதலியன முஸ்லிம்களை மட்டுமே கட்டுப்படுத்தும். சமயச் சட்டங்களைச் சரிவரத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்தந்த சமயங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, தத்துவம், முதலியவற்றை ஓரளாவது அறிந்து கொள்வது அவசியமாகும். அப்படித் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாமலும் காழ்ப்புணர்ச்சியன் அழுத்தத்தில் அவதிப்படுவதன் காரணமாகத்தான், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.
Labels:
A.M.ஸயீத்,
இஸ்லாமியச் சட்டம்,
நீடூர்
Wednesday, August 10, 2011
இஸ்லாமியச் சட்டம்
மாற்றுச் சட்டங்கள்
ஏமாற்றும் உலகை;
கற்பழித்தாலும்
கரம்காட்டிச் சிரிப்பான்;
என்னக் கொடுமை!
ஓட்டையுள்ளச் சட்டம்
ஒழிக்காதுத் தீமை;
தடுக்க நினைத்தாலும்
போகும் வேகம் ஆமை!
குறையில்லாத
மறைத் தந்த வேதம்;
இல்லாதச் சட்டமில்லை;
வெல்லாத நீதியில்லை!
எட்டுத்திக்கும் ஒலிக்கும்
ஒயாத நேர்மை;
எல்லோரையும் ஒன்றாகக் காணும்
இஸ்லாமியப் பார்வை!
இரும்பாய் தோணும்
சட்டங்கள் கயவனுக்கு;
கடுமையானச் சட்டங்கள்
முகம் சிரிக்கும் நல்லவனுக்கு!
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்;
கயமைக்குக் கொடுமை;
நேர்மைக்கு இனிமை!
கிடைக்கும் நேரம்
படித்திடுங்கள் மறைவேதம்;
சவால் விட்டுச்சொல்லும்
கண்டுபிடியுங்கள் குறையேதும்!
Labels:
இஸ்லாமியச் சட்டம்,
கவிதை
Sunday, August 7, 2011
ஏற்கவோ? மறுக்கவோ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
அன்பான சகோதரர்களுக்கு,
என்
நண்பர் அபுஇபுறாஹிம் சத்தியமார்க்கம்.com வலைத் தளத்தினை அறிமுகம்
செய்துவைத்த நாள் முதல் தொடர்ந்து வாசித்து வருகிறேன், அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் புனித மிக்க ரமலான் மாதத்தில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் எனக்கு இருக்கும் சில ஐயங்களைப் பகிர்ந்து, அதற்கான மார்க்க விளக்கங்களைப் பெற விரும்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.
அறியாமைக் காலத்தில் இருந்த நாட்களில் எனக்காக என் பெற்றோர் சேமித்து வைத்திருந்த நகைகள், நிரந்தர வைப்புத் தொகை இப்படியாக என்று சமீபத்தில் என் உடன்பிறந்த இளைய சகோதரர் (அவருக்கும் அல்லாஹ் நேர்வழியை நாடட்டும்) ஒரு குறிப்பிட்ட தொகையையும், 112 சவரன் நகைகளையும் என்னிடம் கொடுத்தார். நான் வாங்க மறுத்து விட்டேன். அவரும் வலுக்கட்டாயமாக, "இது தந்தை உனக்காகச் சேர்த்து வைத்தது. எனவே உனக்கே உரியது" என்று சொல்லி என்னிடமே விட்டுச் சென்று விட்டார். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவை என்னிடமே இருக்கின்றன.
Labels:
இஸ்லாமியச் சட்டம்,
இஸ்லாம்,
ஐயம்
Wednesday, November 11, 2009
இஸ்லாமியச் சட்டம் (1)
நீடூர், A.M.ஸயீத்
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: 'இவை அல்லாஹ்வின் வரைவுகள். இவற்றை நீங்கள் மீறவேண்டாம். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர்தான் அநீதி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன.
Labels:
A.M.ஸயீத்,
இஸ்லாமியச் சட்டம்,
நீடூர்
Subscribe to:
Posts (Atom)



