இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்
முஹம்மது ரஃபீக்
[ எந்த வயதில் ஆண் பெண் உணர்ச்சிகள் பலவீனமாக இருக்குமோ, எந்த வயதில் இரு பாலாரையும் பிரித்து வைப்பது அத்தியாவசியமோ, எந்த வயதில் இரு பாலார் ஒன்றாக இருந்தால் அதிக கேடு வருமோ அந்த வயதில் இரு பாலாரையும் சேர்க்கும் இடமாக இன்று பெரும்பாலான கல்லூரிகள் இருந்து வருகின்றன. அதிகமான கல்லூரிகள் பெண்களை ஹிஜாப் பேணுவதை விட்டும் தடுக்கக் கூடியதாக இருக்கிறது.
கல்லூரியில் காதல் வயப்பட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வளர்த்திருப்பார்கள் என்பதை கூட மறந்து ஓடிப் பொய் திருமணம் செய்துக் கொள்ளும் காட்சி அரங்கேறுகிறது. முக்கியமாக ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்ப்பது சிறந்தது.
சில மாணவர்கள் தவறு என்று தெரிந்தும் "கல்லூரியில் அனுபவிக்காமல் வேறு எப்போது அனுபவிப்பது" என்ற ஒரு கேடுகெட்ட தத்துவத்தை கூறிக்கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கின்றனர். அல்லாஹ்விடம் தவ்பா செய்யக் கூட நேரம் இல்லாமல் அவருடைய மரணம் அவரை அடைந்தால் மறுமையில் அவரின் நிலை என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.
பெரும்பாலான தவறுகள் தீய நண்பர்களின் தூண்டுதளினாலேயே ஊக்குவிக்கப்படுகிறது. புகை, மது, ஊர் சுற்றுவது, சினிமாவிற்கு செல்வது போன்ற பழக்கத்தின் காரணம் தீய நண்பர்களாலேயே தொடங்கப்படுகிறது. தீய செயல் செய்யும் நண்பர்களை விட நம்மை தொழுகைக்கு அழைப்பவராகவும், நாம் செய்யும் தீய செயல்களை சுட்டிக்காட்டி அதை தடுப்பவர்களையும் நண்பராக தேர்ந்தெடுப்பது இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகும்.
Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts
Wednesday, June 13, 2012
Thursday, April 26, 2012
அன்னை ஹதீஜா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி
இன்ஷா அல்லாஹ் 2030க்குள் தமிழக
முஸ்லிம்கள் பள்ளிக் கல்வியை மீண்டும் இஸ்லாமிய அடிப்படையில் மாற்றி அமைக்க
வேண்டும் என்ற சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு சமூக நீதி அறக்கட்டளையின்
பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு
முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு
பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
பள்ளிக் கல்வியை இஸ்லாமியப்படுத்திட
வேண்டும் என்றால் அதற்கு ஆயிரக்கணக்கான இஸ்லாமிக் நர்ஸரி & பிரைமரி
மற்றும் மேல்நிலைப்பள்ளிக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். சமீபகாலமாக
தமிழகத்தில் பரவலாக இத்தகைய பள்ளிகள் துவக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல
ஊர்களில் இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள் துவங்க வேண்டும் என்ற வேட்கை பெருகி
வருகிறது.
Thursday, April 21, 2011
பருவமறிந்து பயிரிடலாமே ! - அனுபவம் பேசுகிறது !
மாணவமணிகள் பள்ளி மேல்நிலை இறுதித் (+2) தேர்வில் மதிப்பெண்கள் எப்படியிருக்குமென்றும் அல்லது இவ்வளவு நிச்சயம் பெற்றிடுவோம் என்றும் முடிவுகளால் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கும் இளசுகளே !
நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? ஒருவேளை கிடைக்கா விட்டால், என் எதிர் காலம்? சந்தேகங்கள் அலையலையாய் அடிக்கத்தான் செய்யும்!. சரி மறுபக்கம், கட்டுக்கோப்புடனிருந்த பள்ளி வாழ்க்கை நிறைவுக்குள் வந்து விட்டது. இனி, ஜாலியான கல்லூரி வாழ்க்கை என்று அடுத்த சில மாதங்களை உற்சாகக் கொண்டாட்டமாகக் கழிக்கத் திட்டமிட்டிருக்கும் பலர்.
Subscribe to:
Posts (Atom)


