இதில் பல வகை உள்ளது நடக்க முடியாத குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள், பெற்றோர்களை பார்த்து உணர்ந்துகொள்ள முடியாத குழந்தைகள் என பலவிதமான இருக்கிறார்கள். இன்னும் தங்களின் சுய தேவைகளான உணவு அருந்துவது, மலம், ஜலம் கழிப்பது போன்ற தங்களின் சுய தேவைகளை கூட செய்துகொள்ள முடியாத நிலையில் பல குழந்தைகள் இருக்கிறார்கள்.
நீண்ட நாளாக நமது ஊரில் இருந்த இந்த குறையை போக்க நமது ஊரில் கல்வி தொடர்பான பல சேவைகளை செய்துவரும் T.S.R குடும்பத்தை சேர்ந்த ஒரு சகோதரியின் பெரும் முயற்சியால் ஒரு சிறப்பு பள்ளிக்கூடம் மஜீது காலனியில் துவங்கப்பட்டுள்ளது. அங்கு இதுபோன்ற குழந்தைகளின் குறைகளை அறிந்து அவர்களுக்கு தகுந்த ஆசிரியர்களின் துணை கொண்டு குறைவான கட்டனத்தில் முறையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.
