Showing posts with label டெலிவிஷன் சேனல். Show all posts
Showing posts with label டெலிவிஷன் சேனல். Show all posts

Friday, November 25, 2011

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதி கட்ஜு

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதி கட்ஜு:
imaite

புதுடெல்லி : பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:

= கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?

மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

= உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

நிச்சயமாக இல்லை.

= உண்மையாகவா சொல்கிறீர்கள்?

உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.

= உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.

= இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?

இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

LinkWithin

Related Posts with Thumbnails