Showing posts with label தந்தை. Show all posts
Showing posts with label தந்தை. Show all posts

Friday, November 14, 2014

தந்தையின் காலம் / தாஜ்

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கப் படிக்கிறார்கள்.

வீட்டிலென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடு படிக்கிறார்கள்.

மண்ணிலென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை விட்டுச் செல்ல
படிப்பாய் தெளிந்தறிகிறார்கள்.

குறுக்கீடு தவிர்க்க
நித்தமும் சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
என்னைக் கண்டு நான் நகலெடுத்த
என் கவிதைத் தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை என்பதும்தான்
எத்தனை சந்தோஷமாக இருக்கிறது.

*
கவிதை காலம்: 1993
 Taj Deen ஆக்கம் தாஜ் தீன் அவர்கள்

Tuesday, September 9, 2014

முற்றம்

 
நாற்சதுரத் தாழ்வாரம்
கீழிறங்கி நடுவில்
அமைந்தது எங்கள்
வீட்டின் முற்றம்.

தானியங்களைப் புடைக்கும்
அதே முற்றத்தில்தான்
அம்மா ஆடைகளையும் .
துவைப்பாள்.

அடைமழை பெய்யும்
மாரிக் காலங்களில்
நாங்கள் நீச்சலடித்து மகிழ
நீர் வெளியேறும் பாதையடைத்து
நீச்சல் குளமாகவும் உருமாறும்.

புது மருமகளாய்
அந்த வீட்டிற்கு வந்த
என் பாட்டி
தலைப் பிரசவத்தில்
தந்தையை ஈன்று
முதன்முதலில் குளிப்பாட்டியது
இதே முற்றத்தில்தானென
மாறாத மகிழ்ச்சியோடு
ஆயிரம் முறை சொல்வாள்!

பின்புக்கும் பின்பு
தாத்தாவாய்
பரிணாமம் அடைந்த
என் தந்தை இறந்தபோது
குளிப்பாட்டிய இதே முற்றத்தில்
ஒருவேளை..
பாட்டியும்
ஐந்தாம் தூணாய்
நின்றிருக்கலாம்!!

- புதுகை அப்துல்லா.

Saturday, February 25, 2012

வாழ்வின் மாறாத நிகழ்வுகள் > தந்தைக்கு ஒரு தாலாட்டு


அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)
நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)

தாய்  தந்தைக்கு இறைவனிடம் துவா செய்வோம் . : ஒரு மனிதன் இறந்தபின் அவனைஅவரை  தொடரும் மூன்று விஷயங்களில் அவருக்காக  துஆ கேட்கும் ஸாலிஹான பிள்ளைகள். தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகள்  அவர் செய்யும் துஆவின் பலாபலன்கள் அவரைச் சென்றடையும், அதாவது துஆவின் மூலம் நன்மைகள் கிடைக்கும், தீமைகள் அழிக்கப்படும்
வாழ்வின் மாறாத  நிகழ்வுகள்
 =====================================================================

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2  

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2
சிங்கை மருத்துவரிடம் இந்தியாவிற்கு என்தந்தையை அழைத்துச் செல்கிறேன் என்று அனுமதி கேட்டதும் அவர்களும் அனுமதி அளித்தனர்.

ஐம்பதாண்டு காலம் வாழ்ந்த சிங்கப்பூர் அந்த நாட்டின் குடிமகன் என் தந்தையை அந்த நாட்டைவிட்டு அழைத்துச் செல்லும்போது என்தந்தையின் மனம் பட்ட கஷ்டங்களை என்னால் காணமுடிந்தது.

உறவினர்கள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டு நின்று தள்ளு வண்டியில் அமர்ந்திருந்த என்தந்தைக்கு வழியனுப்பு விழாவைப் போல வாழ்த்துச் சொல்லி அனுப்பிய அந்த கணம் இனி நான் சிங்கப்பூர் வரவே மாட்டேனோ(?) என்ற கேள்விப் பார்வையோடு அனைவரையும் பார்த்து கண்ணீரோடு விடைபெற்ற அந்த தருணங்கள் வரையில் இவர் மறுஉலக வாழ்க்கைக்கு செல்ல விடைபெறுகிறார் என்ற இரகசியம் எங்கள் யாருக்குமே தெரியாது.

சென்னை விமான நிலையத்தில் எங்கள் குடும்பம் தந்தையின் வருகைக்காக காத்திருக்க தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்த என்தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதனர்.

LinkWithin

Related Posts with Thumbnails